பக்கம்:அழகர் கோயில்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5.4.0. 5.4. கோயிலும் வலையரும் கிராமங்களில் கள்ளர் அழகர் மலையையொட்டிய சாதியினரையடுத்து, வலையர் என்னும் சாதியினர் பெரும்பான்மை யினராக வாழ்கின்றனர். இக்கோயில், கள்ளர், அரிசனங்கள். இடை யர் ஆகிய சாதியாரிடத்தில் தனது சொல்வாக்கை நிலை நிறுத்தி யது போல, கோபிலையொட்டிய பகுதிகளில் வாழும் இந்தச் சாதி யாரிடத்தும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி இயல் யாகவே எழுகிறது. இக்கோயிலுக்கும் வலையர் சாதியார்க்குமுள்ள தொடர்பு இங்கு ஆராயப்படுகின்றது. 5.4.1. வன்னியர் வலையர் - சமூக நிலை : "மதுரை மாவட்டத்தில் இழிந்த சாதியினர்” என்ற செர்ரிங் அடிகளார் (Rev. Sherring) வலையர்களைக் குறிப்பிடுகிறார்.1 வலையர் சாதியில் தர்ஸ்டன் குறிப்பிடும் ஐந்து பிரிவினர் களில் வன்னிய வலையர், சருகு வலையர், பாசிகட்டி வலையர் என்ற மூன்று பிரிவினர் மதுரை, மேலூர், நத்தம் பகுதிகளில் வாழ் கின்றனர். “மதுரை மாவட்ட வலையர்கள் தஞ்சாவூர் வலையர் களைப் போலப் பிராமணச் சார்பு பெறவில்லை” என்கிறார் தர்ஸ்டன்." அவர் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வலையர்கள் மதுரை மாவட்டத்தில் புதிய சமூக மாற்றங்களை இன்னமும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. மேற்குறித்த மூன்று பிரிவினரும் தம்முள் மணவுறவு கொள் வதில்லை, அழகர்கோயிலை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர் வன்னிய வலையர் என்னும் பிரிவினர் ஆவர். இவர்களின் சமூக நிலை அரிசனங்களைப் போன்றதே. தர்ஸ்டன் இப்பிரிவினரைப் பள்ளி என்ற சாதியினரைப் போன்றவர்" என்று குறிப்பிடுகிறார்.3 தவளை, கயிற்றுவலை கட்டிக் குளங்களிலும் வயல்களிலும் மீன், எலி முதலியவற்றைப் பிடித்துண்ணும் பழக்கம் இவர்களிடமுண்டு. "வலையர்களில் சிலர் எலீ, பூனை, தவளை, அணில் முதலிய வற்றை உண்பதாகக் கூறப்படுகிறது" என்று தர்ஸ்டன் குறிப்பீடு வது இப்பிரிவினரையும் சேர்த்தே எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/118&oldid=1467983" இலிருந்து மீள்விக்கப்பட்டது