பக்கம்:அழகர் கோயில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976-79 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாகும். பெரும்பாலும் கள ஆய்வின் அடிப்படையில் எழுந்த இந்த நூல் உருவானபோது துணை நின்றவர் பலராவர். முதற்கண் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய வாய்ப்பளித்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தார் என் நன்றிக்குரியர். எனக்கு ஆய்வு வழிகாட்டியாக அமைந்த, பல்கலைக் கழகத்தமிழியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துச் சண்முகனார் அவர்களின் விரிந்த மனமும் நிறைந்த பரிவுணர்ச்சியும் என்னால் மறக்கவியலா தவை. இந்த ஆய்வு நூலின் கருத்துச் செம்மைக்குத் துணை நின்ற டாக்டர் கோ. விசயவேணுகோபாலன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் டாக்டர் வேங்கடராமன், தட்டச்சுப் படிகளையும், இப் போது அச்சுப்படிகளையும் திருத்தி உதவிய அன்பினர் டாக்டர் மு.மணிவேல், டாக்டர் ம.திருமலை, சில புகைப்படங்களைத் தந்து உதவிய புகைப்படக் கலைஞர் இராமச்சந்திரன், தொல்லியல் துறை அதிகாரி மா சந்திரமூர்த்தி, வரைபடங்களை உருவாக்கித் தந்த இளங்கோவன், டாக்டர் மு.இராமசாமி ஆகியோரை நான் நன்றி யுடன் நினைக்கின்றேன். கள் ஆய்வில் உதவிய நண்பர்கள், ஆய்வு வாய்ப்பும் பட்டமும் அளித்ததுடன் நூலாகவும் வெளியிட்டு உதவிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தார் ஆகியோர்க்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி உரியது. இந்நூலைச் செம்மையாக அச்சிட்டு உதவிய மீரா அச்சகத்தார்க்கும் நான் நன்றியன். மதுரை-9. தொ.பரமசிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/12&oldid=1467855" இலிருந்து மீள்விக்கப்பட்டது