பக்கம்:அழகர் கோயில்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் வலையரும் 113 இப்பொழுதும் கோயிலுக்கள் மதுரை மூலையில் (தென்மேற்கு மூலையில்) இரட்டைச் சய்கில் போட்டுப் பூட்டிவைத்திருப்பதாக ஒரு முதிய தகவலாளி ஆத்திரத்துடன் குறிப்பிட்டார்.! உண்மையில் கோயிலில் அப்படி வதும் இல்லை. 5.4.3. நடைமுறைத் தொடர்பு: நடைமுறையில் இப்பொழுது கோயிலுக்கும் வலையர்க்கும் ஒரே ஒரு தொடர்பு மட்டும் உள்ளது. சித்திரைத் திருளிறாவில் அழகர் மதுரைக்குச் செல்கையில் இறைவனுக்குரிய குடை, சுருட்டி முதலியவற்றைக் கள்ளத்திரி, சோதியாபட்டி ஆகிய விராமங்களைச் சேர்ந்த வலையர்களே தூக்கிவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்வரை ஆமந்தூர்ப்பட்டி வலையர்களும் சேர்ந்து இவ்வேலை யினைச் செய்ததாகக் கூறுகின்றனர். 5.4.4. வரலாற்றுச் செய்தி: கோயிலோடு இவர்களுக்குள்ள தொடர்பை வரலாற்றுப்போக் கில் அறிய வேறு நடைமுறைச் சான்றுகள் இல்லை. ஒரேஒரு எழுத்துச்சான்று மட்டும் கிடைத்துள்ளது. சகம் 1591இல் (கி.பி. 1669இல் வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்குத் திருமலை நாயக்கர் வழங்கிய பட்டயம். ‘“திருமாலிருஞ்சோலை தென்திருப்பதியில் ஆண்டவன் சன் னிதியில் வேடர்களடர்ந்து புகுந்து அநேக திருவாபரணங்களை யும், சொர்ணபாத்திரம், வெள்ளிப்பாத்திரம் முதலியவைகளையும் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விட்டதாய் ஸ்தலத்தார் கூக் குரல் போட்டதில்" என்று குறிப்பிடுகிறது. இப்பகுதி மக்கள் வலையர் `களை 'வேடர்' எனவும் குறிப்பிடுகின்றனர். மலையடிவாரத்தில் சிறு பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடுவதால் இப்பெயரும் இவர்களுக்குண்டு. 5.4.5. வலையன்கதை வர்ணிப்பும் விளக்கமும் : பாடல் ஒன்று ஆய்வாளருக்குக் கிடைத்த வர்ணிப்புப் வலையன் ஒருவன் மலையடிவாரத்தில் கிழங்கு தோண்டும்போது அழகர்கோயில் இறைவன் வெளிப்பட்ட கதையினைக் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/120&oldid=1467985" இலிருந்து மீள்விக்கப்பட்டது