பக்கம்:அழகர் கோயில்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 அழகர்கோயில் "வித்வசிங்கப் பொன்னுச்சாமி வாக்கினின்றார் எம்பெருமான் என்பது அப்பாடலில் வரும் ஓர் அடியாகும். எனவே இப்பாடலைப் பாடியவர் பொன்னுச்சாமி வித்துவான் என்பது தெரிகிறது. பாடலில் வரும் கதை இது: ஒரு வலையன் வள்ளிக்கிழங்கு தேடி அழகர்மலைக்கு வருகிறாள். "தென்சாதி லேவதி ஆங்கோரிடத்தில் தேமாமரத்தடியில் சங்கூதமாய மரவள்ளி ஒன்று சதிராய் முளைத்திருக்க அதைக் கண்டான் வலையமகன் கடப்பாரை நீட்டிக்கடினமுடன் தோண்டலுற்றான்10 கிழங்கு பெரியதாயிருந்தது; பெருமாள் சிரகபோல் இருந்தது; வெகுநேரம் கிள்ளினான்; சூரியன் மறையவே மலையைவிட்டு வீடு வந்து தூங்கி, காலையில் வடக்குமுகமாய் எழுந்தான்; மலைக்குப் போய் பெருமாள் சிரசிலுற்ற பெருங்கிழங்கைத் தோண்டிவிட்டான்; மண்ணுக்குள் இன்னும் கிழங்கின் பகுதி இருப்பதுபோல் தோன் றவே ஆணிக்கிழங்கையும் எடுக்கவேண்டுமென்று, ".... கடப்பாரையாலே இடறினான் உட்கிழங்கை கடப்பாரை தைத்திடவே அரிஓம் நமோ நாராயணன் சிரசில் கடுகி ரந்தம் வந்திடவே”13 கானகம் தாண்டி வீடுவந்துவிட்டான். யாருடனும் பேசவில்லை. அவனுக்குச் சாமிவந்து ஆடினான்; குறி சொன்னான்: பிள்ளைவரம் கொடுத்தான். வலையன் பதறிப்போய் செய்தியறிந்த பாண்டிய மகாராசன் மதுரையிலிருந்து சேனை யோடு வந்தான். வலையனை மேளதாளம் முழங்க அழைத்துக் கொண்டு மலையடிவாரத்தில் கிழங்கெடுத்த பள்ளம்நோக்கி வந்தான். பள்ளத்தை நெருங்கியதும் ஞானத்திரு தெடுமாயன் இருக்குமிடத் தில் நாடியவ்வலையன் ஓடிக் குலவையிட்டான்" அந்த இடத்தில், ஆண்ட சாமியவர் கிருஷ்ணவதாரராய் இனங்குமரனைப்போல் பொன்ராமத்தோடே இருந்தார் செகமளந்தோர் எம்பெருமான்”12 பாண்டிமகாராசன் திருமாலை வணங்கினான். அவ்விடத்தில் திரு மதிலும் கோபுரமும் செம்பொன் மணிமண்டபமும் எடுப்பித்தான். பின்னர் கோயிலில் ஐம்பத்தோரு ராஜாக்கள் கட்டளையும், சிறுகுடி யார் கட்டளையும் ஏற்பாடாயின. இதுவே பாடல் கூறும் கதையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/121&oldid=1467986" இலிருந்து மீள்விக்கப்பட்டது