பக்கம்:அழகர் கோயில்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தை திருவிழாக்கள் கார்த்திகை திருக்கார்த்திகை நீபம் மார்கழி 10 திருவத்யயன உற்சவம் (பகல்பத்து இராப்பத்து) 10 10 சட்டத்தேர் உற்சவம் 119 3 10 10 10 இல்லை கனு உற்சவம் 1 1 தைலப் பிரதிஷ்டை 3 மாசி தெப்ப உற்சவம் 10 11 கஜேந்திர மோக்ஷம் பங்குனி திருக்கல்யாண உற்சவம் 10 5 6.1. பட்டியல் விளக்கம் : 'கோயில் வரலாறு' நூலின் மூலம் ஆனி மாதம் நடைபெற்று வந்த ஜேஷ்டாபிஷேகத் திருவிழாவும், தைமாதம் நடைபெற்று வந்த சட்டத்தேர்த் திருவிழாவும் இப்போது நின்றுபோய்விட்டதை அறியலாம். கல்லின்மேல் மருந்துச்சாந்து பூசப்பெற்ற மூலத்திருமேனி களையுடைய வைணவக் கோயில்களில், ஆண்டுக்கொருமுறை மூலத் திருமேனியின் மீது நிரந்தரமாகச் சார்த்தப்பெற்றுள்ள வெள்ளிக் கல சங்களைக் களைந்து, மூலத்திருமேனியின்மீது மருந்துச்சாந்தினை மேலும் பூசியபின் மீண்டும் சார்த்துவர். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இது நடைபெறும். மீண்டும் சார்த்திய கவசங் களுடன் இறைவன் காட்சி தருவதே 'ஜேஷ்டாபிஷேகம்' என்னும் திருவிழாவாகக் கொண்டாடப்பெறும். அழகர்கோயிலில் இத்திரு விழா இப்போது நடைபெறுவதில்லை. வைணவக் கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா விற்குப் "பிரம்மோற்சவம்' எனப் பெயருண்டு. இது 'தக்ஷிணாயன புண்யகாலந்நில்' (ஆடி மாதம் தொடங்கி ஆறு மாதம் சூரியன் தென்திசையிற் செல்லும் காலத்தில்) நடைபெறுவதாகும். இதைப் போல 'உத்தராயண புண்யகாலத்தில்' (தை மாதம் தொடங்கி ஆறு மாதம் சூரியன் வடதிசையிற் செல்லும் காலத்தில்) கொண் டாடப்பெறும் பிரம்மோற்சவம் பெரிய கோயில்களில் மட்டுமே நடை பெறும். அழகர்கோயிலில் அவ்வாறு நடைபெற்றுவந்த உத்தராயணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/126&oldid=1467991" இலிருந்து மீள்விக்கப்பட்டது