பக்கம்:அழகர் கோயில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 6.4.1. வசந்த உற்சவம்: 123 வைகாசி மாதம் வளர்பிறையில் தொடங்கிப் பத்தாம் நாள் பௌர்ணமியன்று இத்திருவிழா நிறைவுறும். திருவிழாவின் பந்து நாட்களிலும் இறைவன் கோயிலுக்குத் தென்புறத்திலுள்ள வசந்த மண்டபத்தின் நடுவில் நீர்சூழ அமைந்த நீராழிமண்டபத்தில் தன் தேவியரோடு எழுந்தருளி அடியார்களுக்குக் காட்சி தருவார். இவ் வசந்தமண்டப மேற்கூரையில் (ceiling) நாயக்கர் ஆட்சிக்கால இராமாயண ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன (படம்: 10). 6.4.2. முப்பழ உற்சவம் : ஆனி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் இந்திருவிழா விற்கு 'முப்பழத் திருமஞ்சனம்' என்னும் பெயருமுண்டு. ஆயினும் பழங்களினால் இறைவனைத் திருமஞ்சனம் ஆட்டுவதில்லை. மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் இந்நாளில் இறைவ னுக்குப் படைப்பர். 6 4.3. கருட சேவை : எல்லா வைணவ ஆலயங்களிலும், திருமால் கருட வாகனத்தில் திருவீதியுலா வருதல் வைணவ அடியார்களால் சிறப்பாகக் கருதப் படும். இதுவே 'கருட சேவை' எனப்படும். இக்கோயிலில் ஆடி மாதம் நான்காம் திருநாளன்று கருட சேவை நடைபெறும். இக் கோயிலில் பிற வைணவக் கோயில்களைப் போலப் புரட்டாசி மாதம் கருட சேவை நடைபெறுவது இல்லை; 6.4.4. திருவரடிப் பூரம் : ஆடிமாதத்துப் பூர நட்சத்திரத்தினை எல்லர் வைணவக் கோயில்களிலும் ஆண்டாளின் திருநட்சத்திரமாகக் கொண்டாடுவர். இத்தலத்திறைவனான அழகரை ஆண்டாள் மணாளனாகக் கருதி மனமுருகிப் பாடியிருப்பதால் இங்கு இத்திருவிழா வைணவ அடியார் களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவில், திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து வரவிட்ட மாலையினை அழகர் அணிவதும் அழகர்கோயிலுக்கும்' திருவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குமுள்ள உணர்வுப் பிணைப்பிளைக் காட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/130&oldid=1467995" இலிருந்து மீள்விக்கப்பட்டது