பக்கம்:அழகர் கோயில்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-124 அழகர்கோயில் தமிழ்நாட்டு வைணவத்தில் ஒவ்வொரு தலத்திறைவனுக்கும் ஆண்டுக்கு ஒருநாள் அத்தலத்திறைவனின் திருநட்சத்திரமாகக் கருதப்பெறும்.அழகர்கோயிலில் இறைவன் திருநட்சத்திரமாக ஆடி மாதத்து உத்திராட நாளைக் கருதுவர். இந்தாள் அழகர்கோயிலில் கொண்டாடப்பெறுவது போலவே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயி லிலும் கொண்டாடப்பெறுவதே இதன் சிறப்பாகும். திருவில்லிபுத்தூர் கோயிலில், ஆண்டாள் சப்பரத்தில் எழுந்தருளிக் கோயிலுக்குள்ளே ஒரு மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து இத்திருவிழாவினைக் கெண்டாடுவது வழக்கமாகும்.4 அழகர்கோயிலில் இந்நாளில் இறை வனுக்குப் புந்தாடை அணிவிப்பர். 6.4.5. ஆடித்திருவிழா : இத்திருநாள் ஆடி மாதத்தில் பத்து நாட்கள் கொண்டாடப் பெறும். ஒன்பதாம் திருநாள் பௌர்ணமியாக அமையும் வகையில் இத்திருவிழா தொடங்கும். ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் நடை பெறும். வெளிக்கோட்டையின் உள்ளே மதிற்சுவரை ஒட்டியுள்ள பாதையில் தேர் வலம் வரும். தேரோட்டம் பற்றிய பிற செய்தி கள் இவ்வியலின் பிற்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. 6.4.6. திருப்பவித்திர உற்சவம் : பிராமணர்களும் பூணூல் அணியும் பிற சாதியினரும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூலைப் புதிதாக மாற்றி அணிவது வழக்கம். இக் கோயிலில் இறைவனுக்கு ஆவணி மாதம் வனர்பிறை முதல் நாளில் (சுக்கிலபட்ச ஏகாதசியில்) புதிய பூணூல் அணிவிப்பர். தமிழ்நாட்டில் பிராமணர் பூசை செய்யும் பெருந் தெய்வக் கோயில்களில் இந்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். 6.4.7. உறியடி உற்சவம்: உறியடி உற்சவம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் வெவ்வேறு நாட்களில் நடைபெறும். அழகர்கோயிலில் ஆவணி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் (சுக்கிலபட்ச அட்டமி ) நடைபெறும். ஆய்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் உறியிலிருந்து வெண்ணெய் திருடி உண்ட நிகழ்ச்சியினை இத்திருவிழாவன்று நடத்திக்காட்டுவர். ஓர் உயரமான மரத்தை வெட்டிக்கொண்டுவந்து நட்டு அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/131&oldid=1467996" இலிருந்து மீள்விக்கப்பட்டது