பக்கம்:அழகர் கோயில்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 அழகர்கோயில் பத்து நாட்கள் இராப்பொழுதில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் வைணவக் கோயில்களில் வைணவ அடியார்களால் பாடப்பெறுவது வழக்கமாகும். பகற்பத்து', 'இராப்பத்து' எனப் பாடப்பெறும் பொழுதினைக்கொண்டு இத்திருவிழா அழைக்கப்படும். இராப்பத்தில் திருவாய்மொழி மட்டுமே பாடப்பெறுவதால் அதற்குத் 'திருவாய் மொழித் திருநாள்' எனவும் பெயருண்டு. மொத்தம் இருபது நாட் களும் 'திருவத்யயன உற்சவம்' என்றும் 'பிரபந்த உற்சவம்' என்றும் அழைக்கப்பெறும். "திருவாய்மொழி சாமவேதமாகக் கருதப்படுகிறது ......அதனைக் கோயிலில் மோக்ஷை ஏகாதசியன்றே (மார்கழி மாதம் சுக்கிலபட்ச ஏகாதசி) தொடங்குகிறார்கள். அன்றிலிருந்து திருவாய் மொழித் திருநாள் 10 நாள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பத்தாக அநுசந்திக்கப்படுகிறது. முடிவில் 'அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்' என்றபடி ஆழ்வார் மோட்ச மடைகிறார். மோக்ஷ ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது. மோக்ஷ ஏகாதசிக்கு முன்னும் பின்னுமாகக் கோயிலில் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்யப்படுகின்றன. இது பெரிய உத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது. திரு அத்யயன உத்ஸவமென்றே இதற்குப் பெயர். மோக்ஷ ஏகாதசிக்கு முந்திய 10 நாட்கள் பிந்திய 10 நாட்களுமாக 20 நாட்கள் இவ்வத்யயன உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. முந்தியது பகற்பத்து என்றும் பிந்தியது இராப்பத்து என்றும் சொல்லப்படும். அந்தந்த வேளைகளில் அத்ய யனம் செய்யப்படுவதற்கேற்ப அவ்வாறு பெயர் வழங்கப்படுகிறது. வடமொழி மறை தைப் பௌர்ணமியன்றுமுதல் ஓதாது நிறுத் தப்பட வேண்டுமென்றும், ஆவணிப் பௌர்ணமியிலிருந்து மீண்டும் தொடங்கவேண்டுமென்றும் நியமமுள்ளது. அவ்வாறே தென்மொழி மறையாகிய திவ்வியபிரபந்தமும் கார்த்திகை மாசத்தில் பௌர்ண மியன்று முதல் ஓதாது நிறுத்தப்படவேண்டுமென்றும், மார்கழியில் அமாவாசை கழிந்து மீண்டும் தொடங்குவதென்றும் நியமம் கையாளப் பட்டும் இவ்வுத்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது" என்று திரு மலை நல்லான் இராமகிருஷ்ணய்யங்கார் இத்திருவிழாவினை விளக்குகிறார். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/133&oldid=1467998" இலிருந்து மீள்விக்கப்பட்டது