பக்கம்:அழகர் கோயில்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 அழகர்கோயில் வழியைப் பயன்படுத்துவதில்லை. சற்று வடக்கே மதிற்சுவரை இடித்து அமைக்கப்பட்ட 'வண்டிவாசலையே' பயன்படுத்துகின்றனர். தேரோட்டத்தில் குறிப்பிடவேண்டிய செய்தி ஒன்றுண்டு. இத்தேரினை இழுக்கும் பொறுப்பு கோயிலுக்குக் கிழக்கிலும் தெற் கிலுமுள்ள சில கிராமத்தவரின் பரம்பரைப் பொறுப்பாக உள்ளது. அவர்களே இன்றளவும் தேரினை இழுக்கின்றனர். தேரிழுப்பதனைப் பொறுப்பாகக் கருதாமல் மரியாதைக்குரிய உரிமையாகவே இவர்கள் கருதுகின்றனர். தேரின் முதல் வடத்தை இழுக்கும் மக்கள், இக்கோயிலுக்குத் தெற்கிலுள்ள வெள்ளியக்குன்றம் ஜமீன்தாரின் முன்னாள் ஆளுகைக் குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை வண்டிகளி லேற்றி கோயிலுக்கு அழைத்துவரும் பொறுப்பு ஜமீன்தாருடையது. முதலில் தேங்காய் உடைத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைப் பதும், முதல் வடத்துக்கான மரியாதையினைப் பெற்றுக்கொள்வதும் அவரது உரிமையாகும் (படம்:12). தேரின் இரண்டாவது வடத்தை இழுக்கும் பொறுப்பு நரசிங்கம் பட்டி, வெள்ளரிப்பட்டி, ராமநாதபுரம் ஆகிய (மேலூர் வட்டத்தைச் சேர்ந்த) மூன்று கிராமத்தார்க்குமுரியது. இம்மூன்று கிராமங்களும் மேலத்தெருநாடு' எனப்படும். தேரின் மூன்றாவது வடத்தை இழுக்கும் பொறுப்பு 'வடக்குத் தெரு' நாட்டார்க்குரியது. வல்லாளப்பட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, கள்ளந்திரி, கவுண்டன்கரை ஆகிய கிராமங்கள் வடக்குத்தெருநாடு எனப்படும். இக்கிராமங்கள் அனைத்தும் கோயிலிலிருந்து நான்கைந்து மைல் சுற்றளவுக்குள் உள்ளன. தேரின் நான்காவது வடத்தை இழுக்கும் பொறுப்பு தெற்குத் தெரு நாட்டில் (மதுரையிலிருந்து மேலூர் செல்லும் நெடுஞ்சாலை யிலுள்ள) தெற்குத்தெரு என்னும் சற்றே பெரிய கிராமத்து மக் களுக்கு உரியது. மேலத்தெரு, வடக்குத்தெரு தெற்குத்தெரு ஆகிய நாட்டுப்பிரிவு களிலடங்கிய கிராமங்களில் நாட்டுக்கள்ளர்களே பெரும்பான்மை யினர். எனவே இம்மூன்று வடங்களுக்குரிய மரியாதையினையும் கள்ளர் சாதியினரே பெற்றுவருகின்றனர்.T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/137&oldid=1468004" இலிருந்து மீள்விக்கப்பட்டது