பக்கம்:அழகர் கோயில்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 131 நேரோட்டம் தொடங்குவதற்குமுன் இம்மூன்று தெருப்பிரிவு களைச் சேர்ந்த நாட்டார்களும் கூடி, அலங்கரிக்கப்பட்ட தேர் முன் அமர்த்து தங்கள் கிராமங்களுக்கு இடையிலேயான தகராறுகளைப் பேசித் தீர்த்துக்கொள்கின்றனர். கண்மாய்களில் மீன்பிடிப்பது தொடர்பாக இரு கிராமங்களுக்கிடையிலான தகராறும், ஒரு தெருப் பிரிவுக்குள்ளேயே அவ்வாண்டு மரியாதையினை யார் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான தகராறும் பெரும்பாலும் எழுவ துண்டு. 1978, 1979-ஆகிய இரு ஆண்டுகளிலும் மேலத்தெருப் பிரிவினர்க்குள் மரியாதை தொடர்பாக வெள்ளரிப்பட்டி, நரசிங்கம் பட்டி ஆகிய இரு கிராமத்தார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளிலும் மேலத்தெருவிற்கான மரியாதை இரு சாரார்க்குமில்லாமல் காவல்துறையினரின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது. தங்கள் தகராறுகளை இம்மூன்று தெருவினரும் பேசித் தீர்த் துக்கொண்டபின், அனைவரும் மேளதாளங்களுடன் தாரை, கொம்பு முழக்கத்துடன் சென்று முதல் வடத்து மரியாதைக் காரரான வெள்ளியக்குன்றம் ஜமீன்தாரை அழைத்துவருகின்றனர். அவர் சற்றுத் தள்ளி கோயில் எல்லைக்குள் தற்காலிகமாக அமைக் கப்பட்ட கொட்டகையில் தங்கியிருக்கின்றார். அவர் தன் வடந்துக் குரிய மக்களுடன் வந்து, தேர்ச்சக்கரத்தில் தேங்காய் உடைத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைக்கின்றார். தேரோட்டம் முடிந்த வுடன் அல்லது உணவிற்காக நிறுத்தப்பட்டவுடன் மீண்டும் இம் மூன்று தெருப்பிரிவினரும் அவரை மேளதானத்துடன் அவரது கொட்டகையில் கொண்டுவிடுகின்றனர் (படம்:13). வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்குக் கி. பி. 1659இல் (சகம் 1591 இல்) திருமலைநாயக்கர் வழங்கிய பட்டயத்தில் அழகர்கோயில், "ஆடி உற்சவத்தில் சன சமூகத்துடன் திருத்தேர் ஓட்டிவைத்துத் தீர்த்தம் திருத்தளுகை பட்டுப்பரிவட்டமும் பாளைய சனங்களுக்குப் படியும் பெற்றுக்கொள்ள உரிமை அளித்துள்ளார். இப்பட்டயத்தில் வெள்ளியக்குன்றம் ஜமீன்தார், வடக்குக்கோட்டைவாசல் அதுமார் கோவில் கொத்தழங் காவல் எனக் குறிக்கப்படுவதிலிருந்து. இக்கோயிலைச் சுற்றிய கோட்டையும் நாயக்கராட்சிக் காலத்தில் அவருடைய பாதுகாவல் பொறுப்பிலிருந்த செய்தியை அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/138&oldid=1468005" இலிருந்து மீள்விக்கப்பட்டது