பக்கம்:அழகர் கோயில்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 அழகர்கோயில் ஆனால் இப்பட்டயத்தில் கள்ளர்களைப் பற்றிய செய்தியோ குறிப்போ இல்லை என்பது நினைவிற் கொள்ளவேண்டிய செய்தியாகும். தேரிழுக்கும் மக்களுக்குக் கோயிலிலிருந்து 'படி' வழங்கப்பட்ட செய்தியைப் பாளைய சனங்களுக்குப் படியும்" என்ற பட்டயத் தொடரினாலறியலாம். இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகிறது. கோயிலிலிருந்து ஒவ்வொரு வடத்தார்க்கும் 60 படி அரிசி உணவுக்காக வழங்கப்படுகிறது. முற்காலத்தில் தேரோட்டத் தன்று பதினெட்டாம்படி சன்னிதியில் வெட்டப்படும் ஆட்டுத்தலைகள் நான்கு வடத்தார்க்கும் சமமாகப் பங்கிடப்படும். தற்போது சட்டப்படி ஆடுவெட்டுதல் தடை செய்யப்பட்டிருப்பதால், ஆட்டுத் தலைகளுக்கு நட்ட ஈடாகக் கோயில் நிருவாகம் வடம் ஒன்றுக்கு 125 ரூபாய் தருகிறது. ஜமீன்தாருக்கும், ஏனைய மூன்று தெருப்பிரிவினரின் தலைவர் களுக்கும் 8 முழமுள்ள 'நாகமடிப்பட்டு' கோயில் 'மரியாதையாசுத் தரப்படுகிறது. இவை தவிர, ஜமீன்தாரின் வடத்தைச் சேர்ந்த மக்களுக்கு 5 தோசையும் 5படி அரிசிப்பொங்கலும் கோயில் பிரசாத மாகத் தரப்படுகின்றன. ஏனைய மூன்று தெருப்பிரிவினர்க்கு ஒரு வடத்துக்கு 2 தோசையும் 2படி அரிசிப்பொங்கலும் பிரசாத மாகத் தரப்படுகின்றன. 6.5.2. தலையருவித் திருவிழா: ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியன்று நடைபெறும் எண்ணெய்க்காப்பு' உற்சவத்திற்குத் தலையருவி உற்சவம், தொட்டி உற்சவம் என்னும் பெயர்களும் உண்டு. மலைமீதுள்ள அருவிக்கரை மில் நடப்பதால் தலையருவி உற்சவம் என்றும், அருவிநீர் ஒரு கல் தொட்டியில் விழுவதனால் 'தொட்டி உற்சவம்' என்றும் இத்திருவிழா அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் (சுக்கில பட்ச துவாதசியில்) முதல் திருமாலையாண்டான் காலமானார். இவர் ஆளவந்தாரின் மாணவர்: இராமானுசர்க்குத் திருவாய்மொழி கற்பித்தவர். இவர்க்கு அழகர்கோயிலுக்குள் ஒரு சன்னிதியும் உள்ளது. இவரது மரபினர் இக்கோயிலில் 'ஆசார்ய' மரியாதை யினைப் பெற்றுவருகின்றனர். குரு (ஆசார்ய) வழிபாடு வைணவத்தில் பேரிடம் பெறும். கிணற்றில் விழுந்த குழந்தையை எடுக்கத் தானே கிணற்றில் குதிக்கும் தாயைப் போலத் தானே பல அவதாரங்களையெடுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/139&oldid=1468006" இலிருந்து மீள்விக்கப்பட்டது