பக்கம்:அழகர் கோயில்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 அழகர்கோயில் வந்ததனை இக்கதை நிகழ்ச்சியைக் கொண்டு ஒரு நூலே இப் பெயரில் எழுந்திருப்பதால் உணரலாம். மார்கழி மாதம் இராப்பத்து எட்டாம் திருநாளில் இக்கோயிலில் கொண்டாடப்பெறும் 'வேடுபறி. உற்சவம்' தனிச்சிறப்பு வாய்ந்தது. கி.பி. 1659இல் திருமலைநாயக்கர். வெள்ளியக்குன்றம் ஜமீன். தாருக்கு வழங்கிய பட்டயம், அக்காலத்தில் அழகர்கோயிலில் கொள்ளையிட்ட வேடர்களை அவர் பிடித்து வெட்டி. களவுபோன பொருட்களையும் மீட்டதற்காக வழங்கப்பட்ட சில உரியைகளைக் குறித்ததாரும். அவ்வுரிமைகளில் ஒன்று அழகர்கோயிலில் "மார்கழி. உற்சயத்தில் திருமங்கையாழ்வார் லீலை யாகம் நடப்புவித்து அதில் தீர்த்தம் திருமாலை பரிவட்டமும் பெற்றுக்கொள்ளவது ' '18 என்ப நாகும். இக்கோயிலில் இத்திருவிழா நடைபெறும்போது, இறைவனை" வழிமறிக்கவரும் திருமங்கையாழ்வார் சப்பரத்துடன் 'மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியினர் சிலரும் பெருஞ்சத்தம் எழுப்பிக்கொண்டு வருகின்றனர். கொள்ளையடித்துக்கொண்டு சப்பரத் துடன் கள்ளர்கள் சற்றுத்தள்ளிச்சென்று நின்றுகொள்கின்றனர். கோயிலின் முன்னாள் பரம்பரைப் பாதுகாவலரான ஜமீன்தார்" திருடர்களைப் பிடித்துவரத் தன்னுடைய ஆட்களை அனுப்புகின்றார். அவர்கள் சென்று திருமங்கையாழ்வார் சப்பரத்துடன் சுற்றி நிற்கும் கள்ளர்களையும் பிடித்து, அவர்களின் கைகளை முதுகுப்புறத்தே கட்டிக்கொண்டுவருகின்றனர். பிறகு. இறைவன் திருமங்கையாழ் வாருக்குக் காட்சிகொடுத்து அவரையும், உடன்- வந்தோரையும் தன் அடியார்களாக்குகின்றார். திருவிழாவில் இந்திகழ்ச்சிகளனைத்தும் ஒரு. நாடகம்போல நடத்திக் காட்டப்படுகின்றன: ஆழ்வாருடன் கள்ளர்களாக வந்த மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதி யினரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் கோயிலில் பரிவட்ட மரியாதை ; பெறுகின்றனர்.. திருமங்கைமன்னன் இறைவனை வழிமறித்துதைக் கூறும் குருபரம்பரை நூல் திருமாலின் திருவணிகளைத் திருமங்கையாழ்வார். கொள்ளையடித்துக்கொண்டு ஓடினதாகக்குறிப்பிடவில்லை.கொள்ளை: யடித்துக்கட்டிய நகைகளைத் தூக்கமாட்டாமல், திணறிய திருமங் கைமன்னன் ஒரு பிராமண மணமகனைப் போல வந்த திருமாலை நோக்கி, "நீ மத்தர வாதம் பண்ணினாய் என்று நெருக்க, எம்பெரு மானும் அம்மந்தரந்தை உமக்குச் சொல்லுகிறோம் வாரும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/141&oldid=1468008" இலிருந்து மீள்விக்கப்பட்டது