பக்கம்:அழகர் கோயில்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7. சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 7.0. அழகர்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழா தமிழகத் தின் தென்மாவட்டங்களில் நடைபெறும் திருளிராக்களில் மிகப் பெரியதாகும். ஆண்டுதோறும் சிந்திரை மாதம் வளர்பிறைப் பதினொன்றாம் நாளில் (சுக்கிலபட்ச ஏகாதசியில்) நொடன்கி ஒன்பது நாள் நடைபெறும் திருவிழாவாகும் இது. ஐந்தாம் திருநாள் சித்திரை நிறைமதி (பௌர்ணமி) நாளாகும். 7.1. பயணத்திருவிழாவும் கூட்டமும் : இத்திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த சிறப்பு ஒன்றுண்டு. இத் திருவிழாவின் முதல் நான்கு திருநரட்களும் கோயிலில் கொண்டாடம் படுகின்றன. மூன்றாம் திருநாள் இரவுப் பூசை முடித்தவுடன் உடனே நான்காம் திருநாளுக்குரிய பூசைகளைத் தொடங்கி மூன்றாம் திரு நாளன்று இரவு பன்வீரண்டு மணிக்குள் முடித்துவிடுகின்றனர். இரவு ஒரு மணியளவில் இறைவன் கள்ளர் திருக்கோலம் பூண்டு, மதுரை நகருக்குக் கிழக்கே வைகை ஆற்றின் வடகரையிலுள்ள வண்டியூருக்குப் புறப்படுகின்றார். நான்காம் திருநாள் பயணத்தில் கழிந்துவிடுகிறது. மீண்டும் ஒன்பதாம் திருநாளன்று கன்னர் திருக் கோலத்தில் கோயிலை வந்தடைகிறார். இப்பயணத்தின் மொத்தத் தொலைவு. ஏறத்தாழ முப்பது மைல்களாகும். ஒன்பதாம் திரு நாளன்று கோயிலுக்குத் திரும்பும்வரையிலுள்ள திருவிழா நிகழ்ச்சிகள் வழியிடை ஊர்களிலும், மதுரையிலும், வண்டியூரிலும் நடைபெறு கின்றன. இப்பயணத்தில் 'அழகர் ஆற்றிலிறங்கும்' நிகழ்ச்சியை மட்டும் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் காலுகின்றனர்' என இந்திய சென்சஸ் அறிக்கை கூறுகிறது.. இதழ்ச் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.4 7.2. பயண நோக்கம்: பெண்டுகமுனின்னது சாபவிமோசனத்தின் நிமித்தமாகவும். சுந்தரத்தோளுடையாப்' என்று ஸ்ரீ ஆண்டாள் மங்கள் லாஸனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/146&oldid=1468013" இலிருந்து மீள்விக்கப்பட்டது