பக்கம்:அழகர் கோயில்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 141 திரும்பிவிடுகிறார்1. இதுவே அழகர் மதுரைக்கு வருவது குறித்து மக்களிடம் பரவலாக வழங்கிவரும் கதையாகும். 7.4. அழைப்பிதழ் கூறும் காரணங்களும் மக்கள் மதிப்பீடும்: திருவிழாக் காணவரும் மக்களில் பெரும்பாலோர்க்கு, மண்டுக முனிவரின் சாபவிமோசனம் திருவிழாவில் ஒரு நிகழ்ச்சியாக நடப்பதே தெரியவில்லை. ஆனால் மேற்குறித்த பழமரபுக் கதையினை எல்லோரும் கூறுகின்றனர். அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். ஆனால் மறுநாள், (தியாகராசர் கல்லுரியின் பின்புறம் ஆற்றின் நடுவிலுள்ள) தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டுகமுளிவரின் சாபவிமோசன நிகழ்ச் 'சியைக்' காணவரும் மக்களின் எண்ணிக்கை ஆயிரம்கூட இல்லை (படம் : 14). இந்நிகழ்ச்சிக்காக இர்மண்டபத்தின் முன்னர் ஆற்று மணலைச் சிறிய- குளம்போலத் தோண்டி அதில் மீன், தவளை, நாரை முதலியவற்றை வீடுகின்றனள் (படம்: 15). கண்ணுக்குத் தெரிவது தாரையேயாகையால் நேரில் காணும் மக்கள்கூட இந் நிகழ்ச்சியை 'நாரைக்கு முந்தி கொடுத்தல்' என்றே சொல்கின்றனர். கோயில் திருவிழா அழைப்பிதழ் கூறும் இரண்டாவது காரண மான, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையினை அழகர் ஏற்பதும் திருவிழாக் காணவரும் மக்களின் பெரும்பாலோர்க்குத் தெரியவில்லை. இந்நிகழ்ச்சி தல்லாகுளம் பெருமாள்கோயிலுக்குள் நடைபெறுகிறது. அளவீதத்த கூட்டம் காரணமாக அந்நிகழ்ச்சியைக் காணப் பொது மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை; அதிகாரிகள் மட்டுமே அனுமதிக் கப்படுகிறார்கள். எனவே ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையினை 'அழகர் ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி திருவிழாக் காணவரும் மக்களில் பெரும்பாலோர்க்குத் தெரியாமலே போய்விடுகின்றது. 75. திருவிழாவின் முக்கிய- நிகழ்ச்சிகள்:- இப்பயணத்தின்போது அழகர்கோயிலிலிருந்து புறப்பட்ட அழ கர்சுழியிடை அமைந்துள்ள ஊர்களில் அடியவர்களால் அமைக்கப்பட்ட 'திருக்கண்கள்' தொறும் எழுந்தருளுகிறார். இந்திருக்கண்கள் கல்மண் டபர்களாகச் சில இடங்களில் அளாக்கப்பட்டுள்ளன: பெரும்பாலும் கூரைக் கொட்டகைகளாக அமைத்துள்ளன. ஊர்ப்பொதுவாகவும் தனியார் அல்லது சாதிச்சங்கச் சார்பாகவும் இவ்வாறமைக்கப்பட்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/148&oldid=1468015" இலிருந்து மீள்விக்கப்பட்டது