பக்கம்:அழகர் கோயில்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிந்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 143 வந்து சேர்கின்றனர். பின்னர் இறைவன் வெட்டிவேரினால் அலங் கரிக்கப்பட்ட சப்பரமொன்றில் குதிரை வாகனத்துடன் எழுந்தருளித் தல்லாகுளம் கோயிலைவிட்டு வெளிவருகிறார். இந்த இடத்திலிருந்து ஏறத்தாழ அரை மைல் தொலைவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக் கள் சாலையில் அழகருக்காகக் காத்திருக்கின்றனர். வேடமிட்டு ஆடு பவர்களும் வர்ணிப்புப் பாடல்களைப் பாடுவோரும் கேட்போரும் இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். சுமார் நான்கைந்து மணி நேரம் கழித்தபின் ஒரு பர்லாய் தொலைவிலுள்ள தல்லாகுளம் கருப்பசாமிகோயிலுக்கருகில் வத்துசேரும் அழகம், அவ்விடத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஆயிரம் பொன்சப்பரம்' எனப்படும் மிகப்பெரிய சப்பரமொன்றில் குதிரை வாகனத்துடன் எழுத்தருளி வைகையாற் றங்கரை தோக்கி வருகிறார். வைகை மேம்பாலந்தை அடுத்துக் கீழ்ப்புறத்திலுள்ள மூங்கிற்கடை வீதியிலிருந்து. ஐந்தாம் திரு நாளன்று காலை ஆறுமணியளவில் வைகையாற்றில் அழகர் இறங்கு கிறார். இந்நாள், சிந்திரை மாதம் பௌர்ணமி நானாகும். இறை வனாகிய அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்ச்சியே திருவிழாவின் உச்சக் கட்ட நிகழ்ச்சியாக அடியவர்களால் கருதப்பெறுகிறது. ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியைக் காணவே ஐந்துலட்சம் மக்கள் கூடு வதாக இந்திய சென்சஸ் அறிக்கை கூறுகிறது (படம் : 17).இ, நிகழ்ச்சியின்போது ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுக்குந் தலைமுடி மழித்துக் காது குந்துகின் றனர். மதுரையிலிருந்து வரும் வீரராகவப்பெருமாளை ஆற்றிலிறங் கிய அழகர் சந்திக்கிறார். அள்ளிடத்தில் சிறிது நேரம் தங்கிவிட்டுப் பின்னர் ஆற்றி லிறங்கிய வடகரை வழியாகவே கிழக்கு நோக்கித் திரும்புகின்றார். பிற்பகலில் இராமராயா பண்டபத்தின்முன் சென்றவுடன், துருத்திநீர் தெளிப்பவர்கள் அவ்விடத்தில் ஆயிரக்கணக்காகக் கூடி இறைவன் மீது நாங்கள் நோவினாலான துருத்தியில் கொண்டுவந்த நீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர்.ம நாட்டுப்புறமக்கள் இந்நிகழ்ச்சியை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். இந்நிகழ்ச்சி முடித்தவுடன், திருவிழாவுக்கு வரும் நாட்டுப்புறமக்கள் ஊர் திரும்ப முற்படுகின் றனர். இந்நிகழ்ச்சியையடுத்து இராமராலர் மண்டபத்தில் இறைவன் தங்கியிருக்கும்போது அடியவர்கள் கையில் ஒரு தேங்காயினைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/150&oldid=1468017" இலிருந்து மீள்விக்கப்பட்டது