பக்கம்:அழகர் கோயில்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 அழகர்கோயில் பிடித்துக்கொண்டு தரையில் படுத்தவண்ணம் இறைவளின் முன்னால், ‘அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். சௌராட்டிர சாதியினர் மட்டுமே இவ்வாறு அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். பிற சாநி யினர் இவ்வாறு அங்கப்பிர நட்சணம் செய்வதில்லை, அன்று இரவு இறைவன் ஆற்றங்கரையிலுள்ள வண்டியூர் கிராமத்தில் வீரராகவப்பெருமாள் கோயிலில் தங்குகின்றார். இதையே 'துலுக்கநாய்ச்சியார்' வீட்டில் இரவு அழகர் தங்குகிறார் என்று நாட்டுப்புற அடியவர்கள் கூறுகின்றனர் 11 இவ்விரவுப் பொழுதை ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றின் நடுவிலேயே கழிக் கின்றனர். மறுநாள்-ஆறாம் திருநாள்- காலை இறைவன் சேஷ வாகனத்தில் புறப்பட்டுவந்து பதினோரு மணியளவில் வண்டியூர்- அருகில் சுருட வாகனத்தில் ஆற்றின் நடுவிலுள்ள தேனூர் மண்ட பத்தில்' அமர்ந்து தவளையாகிவிட்ட மண்டூகமுனிவருக்குச் சாப விமோசனம் கொடுக்கிறார்.. இந்நிகழ்ச்சி முடிந்ததும் அழகர் மீண்டும் கோயிலுக்குத் திரும்புகிறார். திரும்பும் வழியில் அன்று இரவு இராமராயர் மண்டபத்தில்' இறைவன் அடியார்களுக்குத் தசாவதாரக்" காட்சி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்' பெரும்பாலும் நகர்ப்புறமக்களே கூடுகின்றனர். நடைமுறையில்! மச்சாவதாரம், கூர்மாவதாரம், வாமனாவதாரம் முதலிய அவதாரங் களே காட்டப்பெறுகின்றன. நேரமில்லா'த காரணந்தால் பிற அவதாரக் காட்சிகள் காட்டப்பெறுவதில்லை. கடைசியாகக் காட்டப் பெறும் மோகினிவேடக் காட்சியைக் காட்டித் தசாவதார நிகழ்ச்சியை முடித்து விடுவர். மறுநாள் - ஏழாம் திருநாள்- காலையில் அங்கிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணியளவில் வைகை வடகரை'யிலுள்ள அம்மாளு அம்மாள் மண்டபத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து, இறைவனின் 'சடாரி' 'யை மட்டும் ஆற்றின் தென்கரையிலுள்ள 'அய்யங்கார் தோப்பு மண்டகப்படிக்கு' ஒரு சிறிய பல்லக்கில்' கோயிற் பணியாளர்' எழுந்தருளச் செய்கின்றனர். 'சடாரி மீண்டும் வடகரை திரும்பியவுடன் அழகர்' தல்லாகுளம் நோக்கி வருகிறார். அன்று இரவு தல்லாகுளம் கருப்பசாமி கோயிலுக்கு எதிரிலுள்ள சேதுபதிராஜா- மண்டபத்தில் கள்ளர்- திருக்கோலம் பூண்டு பூம்பல் ஷக்கிலேறி தன் மலையினை நோக்கிப் பயணத்தைத் தொடர்கிறார். மறுநாள் எட்டாம் திருநாள் இரவு - மூணுமாவடி தாண்டி மறவர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/151&oldid=1468019" இலிருந்து மீள்விக்கப்பட்டது