பக்கம்:அழகர் கோயில்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும் 145 மண்டபம் வந்துசேர்கிறார். மறுநாள் ஒன்பதாம் திருநாள் காலை அழகர்கோயில் வந்துசேர்கிறார். ஏழாம் திருநாள் இரவு தல்லா குளத்தில் பூண்ட கள்ளர் திருக்கோலத்திலேயே அழகர்கோயில் வந்துசேர்கிறார்; இடையில் வேறுகோலம் பூணுவதில்லை. ஒன்பதாம் திருநாள் காலையிலேயே கோயிலுக்கு வந்துசேர வேண்டியிருந்தும், கூட்ட மிகுதியாலும், திருக்கண்களின் மிகுதி யாலும் அழகர் அன்று இரவே கோயிலுக்கு வந்துசேரமுடிகிறது (படம்: 18). 7.6. பழமரபுக்கதைச் செய்தி விளக்கம் : இனி அழகரின் பயணத்தைக் குறித்து மக்களிடையே வழங்கும் கதைச் செய்தியினை விளக்கமாகக் காணவேண்டும். 1. அழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்துக்காகச் சீர்வரிசைகளுடன் புறப்பட்டு வருகிறார். 2. அவர் வருவதற்கு முன்னரே திருமணம் முடிந்து விடுகிறது. வைகையாற்றிலிறங்கிய அழகர் செய்தியறிந்து கோபத் துடன் ஆற்றைக் கடக்காமல் கிழக்கே வண்டியூர் நோக்கித் திரும்பி விடுகிறார். 3. அன்றிரவு வண்டியூரில் தன் காதலி துலுக்க நாய்ச்சியார் வீட்டில் தங்கிவிட்டு மலைக்குத் திரும்பிவிடுகிறார். இலை கதை தரும் மூன்று முக்கிய செய்திகளாகும். 7.7. சமூக அமைப்பில் அண்ணன்-தங்கை உறவு: புராணமரபுகளின் (mythology)படி அழகராகிய திருமால். மீளாட்சியாகிய பார்வதிக்கு அண்ணனாவார். அண்ணன் தங்கைக் குச் சீர்கொண்டுவரும் நிகழ்ச்சியை நாட்டுப்புறப் பாடல்கள் குறிக்கு மிடத்து, அழகரையும் மீனாட்சியையுமே அண்ணன் தங்கையாகக் காட்டுவதிலிருந்து நாட்டுப்புற மக்களிடம் இக்கதையின் செல்வாக் கினை உணரலாம். "சம்பா கதிரடித்து-சொக்கர் தவித்துநிற்கும் வேளையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/152&oldid=1468021" இலிருந்து மீள்விக்கப்பட்டது