பக்கம்:அழகர் கோயில்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 அழகர்கோயில் 'காணிக்கை வாரியன்பர் கைகோடி யள்ளிவிடும் ஆணிப்பொன் கொப்பரை முன்னாகவர15 என அழகர் கிள்ளைவிடு தூது வருணிப்பதால், இது அக்காலத் திலேயே திருவிழாக் காட்சிகளில் முக்கியமான ஒன்றாகும் எனத் தெரிகிறது (படம் : 19). இவ்வண்டிகளைக் காணும் மக்கள், அவை யெல்லாம் அழகர் தங்கை மீனாட்சிக்குக் கொண்டுவரும் சீர்ப் பொருள்கள் என்றே எளிதாக எண்ணுகின்றனர்; சொல்லுகின்றனர். பெண்கள் பத்திரிகை ஒன்றுகூட இந்நம்பிக்கையைப் புலப் படுத்தும் வகையில், கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள் தங்கையின் திருமணத்திற்குத் தந்தப்பல்லக்கு, முத்துக்குடை, தங்கக்குடம் முதலிய சீர்வரிசைகளுடன் புறப்பட்டு வருகிறார் என்றெழுது கிறது. 16 ஆனால் நடைமுறையில் அழகரின் சித்திரைத் திருவிழா ஊர்வலத்திற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. வண்டியில் வரும் உண்டியல்களில் தாங்கள் காணிக்கையிட் டாலும், அவற்றை அழகர் தன் தங்கைக்குச் சீர் கொண்டுவரும் வண்டிகள் என்றே மக்கள் கருதுவது இந்நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகிறது. 7.9. திருமணச் செய்தி-சிற்பச்சான்னும் இலக்கிய வழக்கும் : கதையின் அடுத்த பகுதி இது : 'அழகர் வருவதற்கு முன் னரே அவரில்லாமலே தங்கை மீனாட்சியின் திருமணம் முடிந்துவிட் டது. எனவே ஆற்றில் இறங்கிய அழகர் கோபத்துடன் வண்டியூர் நோக்கித் திரும்பிவிடுகிறார்.' மீனாட்சிமம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்திலும் புதுமண்ட பத்திலும் உள்ள மீனாட்சி திருமணச் சிற்பங்களில் திருமால் சிவபெரு மானுக்குத் தன் தங்கையைத் தாரைவார்த்துக் கொடுக்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. எனவே பழமரபுக்கதை தரும் செய்தியினை இச்சிற்பங்களைக் காட்டி மறுக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், 'அத்தலம் நின்ற மாயோன், ஆதி செங்காத்து, நங்கை கைத்தலம் கமலப் போது பூத்ததோர் காந்தள் ஒப்ப வைத்தகு மனுவாய் ஓதக் கரகநீர் மாரி பெய்தான்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/155&oldid=1468024" இலிருந்து மீள்விக்கப்பட்டது