பக்கம்:அழகர் கோயில்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 149 என்று திருமால் தங்கை மீனாட்சியின் திருமணத்தில் கலந்துகொண்டு சிவபெருமானுக்குத்' தன் 'தங்கையைத் தாரைவீஈர்த்துக் கொடுத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது. கடவுளர்க்குள் உறவு. முறையில் திருமால் பிரமனுக்குத் தந்தையாவார். சிவனுக்கும் திரு மாலுக்கும் தந்தையர் உண்டு என்றே பேசப்படுவதில்லை. எளவே அண்ணனாகிய திருமால் தந்தையின் இடத்திலிருந்து தங்கையைத் தாரைவார்த்துக் கொடுக்கிறார். 'அழகர் - வருவதற்கு முன்னரே, மீனாட்சியின் திருமணம் முடிந்துவிட்டது' என்ற பழமரபுக்கதைச் செய்தி, திருவிளையாடற் புராணத்தோடும் சிற்பச் சான்றுகளுடனும் முரண்படும்போது இக் கதைப்பிறப்புக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும் என்று அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. "பன்னிரண்டு மைல் ஊர்வலம் வந்த அழகர் அரை மைல் தூரத்திலுள்ள தன் தங்கை மீனாட்சியின் கோயிலுக்குச் செல்லாதது ஏன்? ஆற்றிலிறங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் நடந்த தங் கையின் திருமணத்திற்கு வராதது ஏன்?: இத்தனை நெடுத்தூரம் வந்த பின்னரும், ஆற்றைக்கடந்து பெரும்பதியாகிய மதுரைக்குள் நுழையாத காரணமென்ன?"-இந்தக் கேள்விகளெல்லாம் திருவிழாக் காணவரும் நாட்டுப்புறமக்கள் மனத்தில் வலிவாக எழுந்திருக்கின்றன. இந்தக் கேள்விகளினால் அலைக்கப்பட்ட தங்கள் மனத்துக்கு அமைதி வேண்டி அவர்களே இக்கதையினைப் படைத்து வழங்கி வருகின்றனர் எனலாம். தமிழ்நாட்டுக் குடும்ப அமைப்புமுறையில், உறவினர்கள் உரிய மதிப்பினைத் தரவில்லை என்ற காரணத்தால் ஒருவன் கோபமும் வருத்தமும் கொள்வதும், வருத்தத்தினால் உறவினர் களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதும் நடைமுறையில் இயல்பாகக் காணக்கூடிய நிகழ்ச்சியேயாகும்; சமூகமும் அதை ஏற்றுக்கொள் கிறது. எனவே திருவிழாக். காணவரும் நாட்டுப்புறமக்கள் தங்கள் சமூக அமைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு காரணத்தையே அழகரின் கோபத்திற்கும் வருத்தத்திற்கும் காரணமாகக் கற்பித்திருக்கிறார் கள் எனக் கருதமுடிகிறது. அழகர் மதுரைக்குள்' வந்திருந்தாலும், கிழக்கே வண்டியூ கருகே உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டுகமுனிவருக்குச் சாப விமோசனம் தரும் நிகழ்ச்சிக்காகக் கிழக்கு நோக்கிந்தான் திரும்பிச் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/156&oldid=1468025" இலிருந்து மீள்விக்கப்பட்டது