பக்கம்:அழகர் கோயில்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 அழகர்கோயில் ஆனால் தமிழகத்தில் இன்றளவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயுடு, நாயக்கர். செட்டியார் முதலிய சாதியினரும் தமிழ் பேசும் முசுலிம்களும் சமாமன்-மரும்கன்' என உறவு சொல்லி அழைத்துக்கொள்ளும் வழக்கம் நடைமுறையிலுள்ளது. மேற்குறித்த தெலுங்குச் சாதியார் வைணவ சமயம் சார்ந்தவர்களே. இவ்வுறவு முறைப் பிறப்பின் காரணமும் : எதிரிகளான முசுலிம்களின் பகை யுணர்ச்சியை மழுங்கச்செய்வதே' எனக் கருதலாம். மற்றொரு செய்தியும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். தென் னார்க்காடு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் (திருமூட்டத்தில்) கோயில் கொண்ட திருமால் ஆண்டுக்கொருமுறை மாசிமகத்தில் கிள்ளை என்னும் ஊருக்குக் கடலாடச் செல்லும்பொழுது அவ்வூரிலுள்ள ஒரு முசுலிம் சமாதிக்கு அடியவர்க்குரிய மரியாதையினை அளித்துச் செல்வது இன்றளவும் வழக்கமாக நடந்துவருகிறது. 23 ஸ்ரீமுஷ்ணம் (திருமுட்டம்) கோயிலில் உள்ள பதினாறுகால் மண்ட்பத்தில் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இது முசுலிம் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்தது என அவ்வூர். மக்கள் கூறுகின்றனர். இருப் பினும் பிற்காலத்தில் இக்கோயிலில் திருவிழா நடத்த மானியமாகச் சில நிலங்களை ஒரு முசுலிம் அளித்துள்ளார். ஆகையால் இக் கோயிலில் இன்றும்கூட முசுலிம்கள் தேங்காய் உடைத்து இறை வனை வழிபடுவதாகக் கோயில் அர்ச்சகர் கூறுகிறார். 24 இவையனைத்தும் வலிய எதிரிகளான முசுலிம்களை எதிர்க்க வழியில்லாத தமிழ்நாட்டு வைணவம்,அவர்களை உறவாக்கிச் செயலற்றவர்களாக ஆக்க முயன்றதற்குச் சான்றுகளாகும். துலுக்க நாய்ச்சியார் கதை அம்முயற்சியிற் பிறந்த ஒரு கதையாகும். 7.11. டென்னிஸ் அட்சன் நான்கு செய்திகள் - மதிப்பீடு: சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருமணம் - அழகர் வருகை பற்றிய பழமரபுக் கதையினை (myth) முதலில் ஆராய்ந்தவர் டென் னிஸ் அட்சன் (Dennis Hudson) என்பவர் ஆவார், 25 இக்கதை பிறப்பதற்கான அரசியல், சமூக, வரலாற்றுப் பின்னணியைப் பற்றிய அவரது ஆய்வுக் கருத்துக்களும் முடிவுகளும் எண்ணப்படவேண்டி யவையாகும். தம் ஆய்வின் விளைவாக அவர் தரும் நான்கு கருத் துக்களை மதிப்பிடுவது இப்பழமரபுக் கதையினை நாம் ஆய்ந்துணரத் துணைபுரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/159&oldid=1468028" இலிருந்து மீள்விக்கப்பட்டது