பக்கம்:அழகர் கோயில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகர்கோயிலின் அமைப்பு 9 இம்மண்டபத்தின் ஒரு தூணில் திருமலைநாயக்கரின் சிலை உள்ளது. ஆகவே இம்மண்டபம் அவரால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சாலையின் கீழ்ப்புறத்தில் தேர்மண்டபம் உள்ளது. இக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால், 'அமைத்த நாராயணன்' என்பது இக்கோயில் தேரின் பெயர் என்பதும், தேரோடும் வீதிகளில் ஒன்றின் பெயர் 'தியாகஞ் சிறியான் திருவீதி' என்பதும் தெரிகின்றன". ஆடிமாதம் பௌர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. கோயிலமைந்த உட்கோட்டைக்கு வடக்கிலும் மேற்கிலும் மலைகள் இருப்பதால் இக்கோயிலின் நேர் கோயிலைச் சுற்றிவர இயலாது. மரங்களடர்ந்த வெளிக்கோட்டையின் நான்கு சுவர்களையும் ஒட்டித் தேர் ஓடுகின்றது. 4.இரணியன் கோட்டைப்பகுதி : தேர் மண்டபத்தைத் தாண்டிச்சென்றால் உட்கோட்டையின் தெற்கு வாசலான 'இரணியன் வாசலை' அடையலாம். இவ்வாசலைத் தாண்டி உள்நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானைவாகன மண்டப மாகும். திருவிழா நாட்களில் கள்ளர் சமூகத்துக்குரியதாக இம் மண்டபம் உள்ளது. இதையும் நாண்டி வடக்கே சென்றால் இக்கோ 'யிலின் இராஜகோபுர வாசலை அடையலாம். இக்கோபுர வாசலி 'லுள்ள கல்வெட்டுக்களில் சுகம் 1435 (சீ.பி.1513) இல் எழுந்த விசய நகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே காலத்தால் முந்தியதாகும். எனவே இக்கோபுரம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்று கிறது. இக்கோபுர வாசலை மக்கள் பயன்படுத்தமுடியாது. எப் பொழுதும் அடைத்துக்கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச்சுவர்க ளோடுகூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன. இவையே பதினெட் டாம்படிக் கருப்பசாமியாக வழிபடப்பெறுகின்றன (படம். 2). இதனெதிரில் உள்ள பதினாறுகால் மண்டயம் 'சமய மண்டாம்' அல்லது 'ஆண்டார் மண்டபம்' எனப்படும். ஆடி, சித்திரைத் திருவிழாக் காலங்களில் இக்கோயில் ஆசாரியரான ஆண்டார் இம் மண்டபத்தில் வீற்றிருப்பார். இதனையடுத்து வடபுறத்தில் உள்ளது கொண்டப்ப நாயக்கர் மண்டபமாகும். சித்திரைத் திருவிழாவில் மதுரைக்குப் புறப்படும் அழகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி இரவு உணவை முடித்துக்கொள்வார். இதனையடுத்து வடக்கே முப்பதடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/16&oldid=1467871" இலிருந்து மீள்விக்கப்பட்டது