பக்கம்:அழகர் கோயில்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் செய்தி ! சைவ 159 வைணவப் பாண்டிய நாட்டில் நீண்டகாலமாகச் போராட்டம் நடந்துவந்திருக்கிறது. மதுரை நகரம் சைவத்தோடு. நெருங்கிய தொடர்புடையது.' இருப்பினும், பாண்டிய நாட்டு வைணவர், பெரும்பாலும் சைவர் நிறைந்த அல்லது வைணவ ரல்லாத இந்து சமூகத்தில் வேகமூம் தற்காப்புணர்வும் பொருந்திய சிறுபான்மையினராக இக்கதையின்வழி உருவகப்படுத்தப்பட்டனர். 25 மதிப்பீடு: இக்கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகிறது. ஸ்ரீகள்ளழகம் கோயில் வரலாறு இக்கதையினை சைவ, வைஷ்ணவ மதங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சி" என்று குறிப்பிடுகிறது.37 செய்தி : 2 மதுரை மீனாட்சி திருமணத் திருவிழா, அழகர், சித்திரைத் திருவிழா இரண்டையும் இணைத்தவர் திருமலைநாயக்கரே. தான் புதிதாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு அமைத்த தேர்களை இழுக்க ஆட்களைச் சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முட் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக அமையும் பொருட்டும் அவர் இதனைச் செய்தார். திருவிழாக்களை மாற்றக்கூடத் தனக்கு அதிகாரமிருப்பதைக் காட்டவும் அவர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தினார் என்கிறார் அட்சன்,28 மதிப்பீடு: திருமலைநாயக்கரே இரண்டு திருவிழாக்களையும் இணைத் தார் எனும் கருத்து ஏற்புடையதே. 29 சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருமண ஊர்வலம் சித்திரை வீதியில் வராமல் இன்றும் மாசி வீதியிலேயே வருவது, மீனாட்சி, திருமண விழா மாசி மாதத் திலிருந்து சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டிருப்பதற்கு நல்ல சான்றாகும். இச்செயலுக்கு அட்சன் கற்பிக்கும் நோக்கங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவே, செய்தி: 3 அழகருக்கும் கள்ளருக்குமிடையேயான உறவு திருமலை நாயக்கர் காலத்திலோ அதற்கு முன்னரோ ஏற்பட்டிருந்தால் நிரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/160&oldid=1468029" இலிருந்து மீள்விக்கப்பட்டது