பக்கம்:அழகர் கோயில்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 அழகர்கோயில் செய்தி பயன்பட்டிருக்கிறது. எனவே அட்சன் தரும் நான்காவது ஏற்புடையதே என்று கொள்ளலாம். 7.12. இரண்டு முடிவுகள் மதிப்பீடு : இனி, தன் ஆய்வின் முடிவுகளாக அட்சன் தரும் இரு கருத் துக்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியவை. மீனாட்சி திருமணம்-அழகர் வருகை பற்றிய: பழமரபுக் கதை மூன்று வகையான போராட்டங்களைக் காட்டுகின்றது என்பது அவர் கருத்தாகும். 1) அரசியல் ரீதியாகக் கள்ளர்களுக்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இடையிலான போராட்டம், 2) சமூகவியல் ரீதியாகத் தாழ்ந்த சாதியாரான கிராமப்புற மக்கள், அவர்தம் வழிபாட்டுநெறிகள் ஆகியவற்றுக்கும், பெரும்பாலும் உயர்சாதியாரான நகரமக்கள், அவர்தம் வழிபாட்டுநெறிகள் ஆகியவற்றுக்கும்' இடையே நடந்த' போராட்டம். 3) வரலாற்று ரீதியாகச் சைவ-வைணவ மதங்களுக்கிடை யேயான போராட்டம். 18 அட்சன் குறிப்பிடும் இம்மூன்றுவகைப் போராட்டங்களில் முத; லாவது குறித்து முன்னரே கண்டோம்.. - இரண்டாவதாகக் குறிப்பிடும் போராட்டத்தினை விளக்கு கையில், அழகரின் திருவிழர் ஊர்வலத்தில் கலந்துகொள்வோரில் பெரும்பான்மையினர் தாழ்ந்த சாதியினர்; கிராமப்புறத்தினர்; பெரும் பாலும் கோனார். கள்ளர். ஆகிய சாதியினர் ஆவர் என்கிறார் அட்சன். ஆய்வாளர் நடத்திய களஆய்வில் அரிசனங்களும், இத் திருவிழாவில் பெருந்தொகையினராகக் கலந்துகொள்வதை அறிய முடிந்தது. அழகரை வேடமிட்டு வழிபடும் அடியவர்களிடத்தில் கோனார் சாதியினர் 32 சதவீதமும், அரிசனங்கள் 28 சதவீதமும் இருப்பதைக் களஆய்வில் காணமுடிந்தது. அட்சனின் நோக்கில் (observation) பிறந்த கருத்தினைக் களஆய்வு ஒரு சிறு மாறுதலு டன். வலியுறுத்தவே செய்கிறது. மேலும் மீனாட்சி திருமணத் திருவிழாவில் கலந்துகொள்ளும் சாதியினர் ஒருகாலத்தில் சுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/163&oldid=1468032" இலிருந்து மீள்விக்கப்பட்டது