பக்கம்:அழகர் கோயில்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 அழகர்கோயில் அமைப்பு, சிறுதெய்வக் கோயில்களின் சாமியாடுவோரை ஒத்திருக் கிறது. ஆனால் துருத்திதீர் தெளிப்போரின் உடை அமைப்பு வேறு பட்டதாக அமைகிறது. அட்சன், இவர்கள் கிருஷ்ணனைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் ஆடை, அணிகலன்களைப் பூண்டிருப் பதாகக் கருதுகிறார். தலையிலுள்ள கொக்குமுடி, உகுமால், நிறையப் பூமாலைகளை அணித்துகொள்ளல், முகத்தில் வண்ணப் பொடி பூசுதல், பெரும்பாலும் பல வண்ணப் பட்டுத்துணிகளால் ஆன ஆடையினை அணிந்திருத்தல் ஆகியவை அவரை அவ்வாறு எண்ணத் தூண்டியிருக்கலாம். ஆனால் இடுப்பில் வரிந்து கட்டிய கச்சையும் (தற்போது முழங்காலுக்குச் சற்றுக் கீழாக வரும் அளவில் பேன்ட்' (pasts) ஆகத் தைத்துக் கொள்கின்றனர்), கச்சைக்கு மேலே இறுகக்கட்டியுள்ள சல்லடமும், இரண்டிற்கும் மேலாக இறுகக் கட்டியுள்ள பட்டியும் (beli) ஒரு போர்வீரனின் உடைகளைப் போலத் தோற்றமளிக்கின்றன. இவர்கள் கையில் போர்க்கருவிகள் எதுவுமில்லை. எனினும் கச்சைக்கு மேலே சல்லடம் கட்டுதல் ஒரு கடினமான வேலை செய்யும்போதே தேவைப்படும். கணுக் காலளவில் இல்லாமல் முழங்காலுக்குச் சற்றுக் கீழாக உள்ள இறுக்கிய கச்சையும் அவ்வாறே ஒரு கடினமான வேலைக்கு ஆயத்தப்படுபவனைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது. 'கச்சை கட்டுதல்' என்ற தொடரே வழக்கு மரபில், 'சண்டைக்குப் போதல்' என்னும் பொருளைத் தருவதும் எண்ணத்தகுந்தது. ஒரு வீரனுடைய தோற்றம். இறைவனை வழிபடும் அடிய வனுக்கு ஏன் தேவைப்பட்டது என்பது சிந்தனைக்குரிய ஒரு செய்தி யாகும். திருவிழாவில் ஆய்வாளர் நடத்திய களஆய்வில் 'அழகர் ஏன் மதுரைக்குள் போகவில்லை?' என்ற கேள்விக்கு மொத்தம் முப்பத் திரண்டு விழுக்காட்டினரே (32%) விடையளித்தனர். ஒன்பது விழுக் காட்டினர் அளித்த விடைகள் ஒன்றுபோல அமைந்தன.41 1. மதுரை வந்து தங்கச்சிபூமி. 2. அவருக்கு (அழகருக்கு) அங்கே (மதுரைக்குள்) போக இடமில்லை. 3. அது (மதுரை) மீனாட்சிபூமி. அவருக்கு (அழகருக்கு) அக்கரைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/165&oldid=1468034" இலிருந்து மீள்விக்கப்பட்டது