பக்கம்:அழகர் கோயில்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமாபுக் கதையும் 161 'அழகர் ஊர்வலம் மதுரையைச் சேர்ந்த உயர்சாதியினரால் பெரும்பாலும் சைவர்களால் தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக் கலாம். பிராமணப் பூசனைபெறும் பெருந்தெய்மான (brahmanical deity) அழகர், தாழ்ந்த சாதிக்காரச்களான களனர்களைப் போல வேடம் புனைந்து வந்தது, இம்மறிப்புக்கு வலுவான காரணமா யிருக்கலாம். மோதல்களுக்குப் பிறகேற்பட்ட உடன்பாட்டில் அழகர் ஊர்வலம் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு மதுரையை ஒட்டிய வையையாற்றுப் பகுதியிலும், வடிையூரிலும் அழகரின் கள்ளர் வேடம் தடைசெய்யப்பட்டிருக்கலாம்'. அப்படியாயின் அழகர் கள்ளர் வேடம் புனையத்தொடங்கிய காலத்திற்குமுன் மதுரை நகருக்குள் வந்ததுண்டா? என்ற கோள்வி எழுகிறது. இக்கேள்விக்கும் ஒரேஒரு சான்றினைக் கொண்டே ஊகமாக விடையளிக்க வேண்டியுள்ளது. என மதுரை அரசரடி ஆரப்பாளையம் பகுதிகளுக்கிடையே 'அழகரடி' என ஒரு பகுதி இன்றளவும் வழங்கப்படுகிறது. மதுரை நகருக்குள் அழகர் ஒரு காலத்தில் வந்து இவ்விடத்தில் தங்கியதாக ஒரு வழக்குமரபும் இப்பகுதி மக்களிடத்தில் உள்ளது. மிகப்பெரிய இரு பாதங்கள் கல்லில் செதுக்கப்பட்டு, அவ்விடம் ஒரு சிறிய கோயிலாக ஆக்கப்பட்டு, மக்களால் ‘அழகரடி' வழங்கப்படுகிறது. 42 மதுரை நகரிலேயே அனுப்பக்கவுண்டர்கள் ஒரு காலத்தில் தங்கிய இடம் 'அனுப்பானடி' என இன்றளவும் வழங்கப்படுவது போல, அழகர் வந்து தங்கிய இடம் 'அழகரடி' எனவழங்கப்பட்டிருக் காலம். மக்கள் இரு பாதங்களை இவ்விடத்தில் வணங்கி வந்தாலும் 'அடி' எனும் சொல் இடப்பொருண்மை தருவதாகவே (குழாயடி, கிணற்றடி என்பவை போல) வழங்கியிருக்க வேண்டும் என்றும் கொள்ளமுடிகிறது. எனவே அழகரின் கிராமப்புறத் தாழ்ந்த சாதியினரான அடியவர்கட்கும், மதுரை நகரத்து உயர்சாதியினரான சைவர்க்கும் நடந்த போராட்டம் என அட்சன் கூறும் இரண்டாவது போராட்ட மும் பொருத்தமானதே. மூன்றாவதாக அட்சன் குறிப்பிடும் 'சைவ-வைணவப் போராட் டம்' என்ற கருத்தும் இரண்டாவது போராட்டத்தின் உள்ளடக்க மாகிவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/168&oldid=1468039" இலிருந்து மீள்விக்கப்பட்டது