பக்கம்:அழகர் கோயில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அழகர்கோயில் என்று தூரத்தில் மலை செங்குத்தாக நிற்கிறது. மேற்கே இராஜகோபுர மதிலின் வட எல்லையில் அம் மதிற்சுவர் உடைக்கப்பட்டு ஒரு வாச லாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாசலுக்கு, 'வண்டி வாசல்' பெயர் (படம் 3). இவ்வாசலே மக்கள் கோயிலுக்குள் செல்லப் பயன்படுத்தும் வாசலாகும். திருளிழாக்காலங்களில் இறைவனின் பல்லக்கு. கோயிலிலிருந்து இவ்வாசல் வழியாகத்தான் வெளியே வரும்; உள்ளே செல்லும். வண்டி வாசல் வழியாக, மேற்கு நோக்கி இராஜகோபுர மதிலின் உட்பகுதிக்கு வந்தால், மதிலின் வெளிப்பகுதியினைவிட உட்பகுதி சமதளமாக்கப்பபட்டு இருப்பதனை உணரலாம். கோயில் மலைச்சரிவில் அமைந்துள்ளது. எனவே இம்மதிலுக்கு வெளிப்புறப் பகுதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சரிந்ததாக உள்ளது. 1.5. யதிராஜன் திருமுற்றப்பகுதி : இராஜகோபுர மதிலுக்குள் காணப்படும் பரந்தவெளி யதிராஜன் திருமுற்றம்' என வழங்கப்படும் (படம் 4). இம்முற் றத்தின் நடுவிலமைந்துள்ள மிகப்பெரிய மண்டபம் திருக்கலியாண மண்டபமாகும். பங்குனி உத்தரத்தன்று இக்கோயில் இறைவனின் திருமணம் இம்மண்டபத்திலேயே நடைபெறும். இம்மண்டபத்தை விசயநகர மன்னர் காலச் சிற்பங்கன் அணி செய்கின்றன. இரணிய வதம் செய்யும் நரசிம்மர்ன் இரண்டு தோற்றுங்கள். குழலூதும் வேணுகோபாலன், திரிகிக்கிரமன், பூமிவராகர், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் இம்மண்டபத்திலுள்ளன. அவற்றுள் சில உடைக் கப்பட்டுள்ளன. 1757 இல் ஹைதர் அலி ..... அழகர்கோயில் கலியாணமஹாலில் உள்ள விக்கிரங்களை உடைத்துக் கோயிலில் இருந்த ஏராளமான பணத்தையும் சொத்தையும் கைப்பற்றிக் கொண்டாள்" என ‘ஸ்ரீகள்ளழகர் கோயில் வரலாறு' கூறுகின்றது.I யதிராஜன் திருமுற்றத்தில் தென்கிழக்கு மூலையிலுள்ளது கோடைத்திருநாள் மண்டாமாகும். சித்திரைத் திருவிழாவில் முதல் மூன்று நாட்களும் இம்மண்டபத்தில் திருவிழா நடைபெறும். இதனை யடுத்து மேற்கே மதுரையைச் சேர்ந்த இடைச் சாதியினர்க்குச் சொந்தமான ஒரு மண்டபம் உள்ளது. இதன் மேற்கில் உடையவர், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இதன் மேற்கே கோயிற் பிராமணப் பணியாளர் குடியிருப்பு உள்ளது. யதிராஜன் திருமுற்றத்துக்கு வடக்கே மேற்கூரை வட்டவடிவிலான ராமகளஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/17&oldid=1467872" இலிருந்து மீள்விக்கப்பட்டது