பக்கம்:அழகர் கோயில்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 0. 8. வர்ணிப்புப் பாடல்கள் அழகர்கோயிலை மையமாகக்கொண்டு எழுத்த நாட் டுப்புறப் பாடல்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. இவற்றுள் சில அச்சிடப்பட்டவை; ஆய்வாளர் களஆய்வில் திரட்டியவை அச் சிடப்படாதவையாகும். இவை எல்லாப் பாடல்களுமே 'வர்ணிப்பு' என்ற பெயரோடு விளங்குகின்றன. 8.1. கிடைத்துள்ள வர்ணிப்புகள்: 1) அச்சிடப்பட்டவை 1. அழகர் வர்ணிப்பு (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) 2. கிருஷ்ணாவதார வர்ணிப்பு 5. 3. கூர்மாவதார வர்ணிப்பு 4. இராமசாய்க்கவீராயர் இயற்றிய 'பெரிய அழகரி வர்ணிப்பு' மொட்டையக்கோன் சிஷ்யர் சாமிக்கண்ணுக்கோனார் இயற்றிய 'சோலைமலைக் கள்ளழகர் வைகையாற் றுக்கு வந்த தசாவதார வர்ணிப்பு 6.மூக்கன் பெரியசாமிக்கோன் இயற்றிய ஸ்ரீ கள்ளழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு' 2) அச்சிடப்படாதவை 7. வர்ணிப்பு 8. ராக்காயி வர்ணிப்பு 9. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 10. வலையன்கதை வர்ணிப்பு இவை நான்கும் ஆய்வாளரால் களஆய்வில் ஒலிப் பதிவு செய்யப்பட்டவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/173&oldid=1468044" இலிருந்து மீள்விக்கப்பட்டது