பக்கம்:அழகர் கோயில்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 167 11. கையெழுத்துப்படியாகக் கிடைத்த கருப்பசாமி வர் ணிப்பு பிள்ளையார்பாளையம் சமயக்கோனார் வீட்டில் கிடைத்த பாடல் இது. முத்திருளமாமலை நாடாரால் இது எழுதப்பட்டது என அவர் கூறினார்.1 8.2. 'வர்ணிப்புப்பாடல்-விளக்கம்: ஒரு கதை அல்லது ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு செய்தி அல்லது ஒரு காட்சியினைப் பலப்பட வருணித்துக்கூறும் பாடல்கள் 'வர்ணிப்பு' ஆகும். ஒரு கதையினையோ அல்லது ஒரு நிகழ்ச் சியினையோ பாடவந்தாலும் அவற்றின் முக்கியத்தன்மையினை மறந்து, வருணித்துச் சொல்லும் பாங்கிலேயே இவை கருத்தூன்றும். எனவே ஒரு காட்சி வருணனை அல்லது பல காட்சி வருணனை களின் தொகுப்பே வர்ணிப்புப்பாடல் எனப்படும். ராக்காயி வர்ணிப்பு, ராக்காயி தன் குழந்தைகளுடன் தன் அண்ணன் சுருப்பசாமியைக் காணவரும் நிகழ்ச்சியினையும், அவன் அவளுக்குக் காட்சி தருவதையும் பாடுகிறது. பாடல் முழுவதும் இந்த ஒரு நிகழ்ச்சியே விரித்து வருணிக்கப்படுகிறது. வர்ணிப்புப் பாடல்கள் ஒரு கதையினைக் கூறும்போதுகூடக் கதைப்பாடல் (ballad) என்ற தகுதியைப் பெற இயலாதவை. ஒரு கதைப்பாடலுக்குரிய தோற்றம், வளர்ச்சி, உச்சம் முதலிய படி நிலைகள் வர்ணிப் ப் பாடல்களில் இருப்பதில்லை. எல்லாச் செய்தி களையும் உணர்ச்சிகளில் ஏற்ற இறக்கமின்றி, நாடகத் தன்மை இன்றி, ஒரே சீராக இவை பாடிச்செல்லும். குறிப்பிடத்தகுந்த இந்த வேறுபாட்டினால் வர்ணிப்புப் பாடல்களைக் கதைப்பாடல்கள் எனவும் மதிப்பிடமுடியாது. 'பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி' என்ற வர்ணிப்புப் பாடல் கோயிலைக் கொள்ளையிடவந்த பதினெட்டுப்பேர் பிடிக்கப் பட்டு, வெட்டிப் புதைக்கப்பட்ட கதையினைக் கூறுகிறது. பதினெட்டு லாடர்களையும் பலபட வருணிக்கும் இப்பாடல் மந்திர தந்திரங் களில் வல்ல இப்பதினெட்டுப்பேரையும் நாட்டார்கள் வெட்டிப் புதைந்த நிகழ்ச்சியினை-கதையின் உச்சமான பகுதியினை-இரண்டே அடிகளில் சொல்லிவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/174&oldid=1468045" இலிருந்து மீள்விக்கப்பட்டது