பக்கம்:அழகர் கோயில்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

168 83. பாடப்பெறுவன -படிக்கப்பெறுவனவல்ல : அழகர்கோயில் சாதாரண நாட்களில் பாடக்கேட்டு மகிழவும், திருவிழா நேரங்களில் ஒருவர்மீது சாமி இறங்கச் செய்யவும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன எளவே வர்ணிப்புப் பாடல்களின் சுவையும் பயனும் பாடுபவரின் குரல்வளத்தைப் பொறுத்து அமையுமே தவிரப் பாடலின் கதைப்பொருளைப் பொறுத்தல்ல. ஒருவர்மீது சாமி இறங்கச் செய்ய முழுப்பாடலையும் பாடவேண்டிய தேவை இல்லை. பத்துப்பதி னைந்து அடிகள் பாடுமுன்னரே சாமி இறங்கிவிடுகிறது; பாடல் நிறுத்தப்படுகிறது. எனவே இந்தப் பாடல்கள் பாடவும் கேட்கவும் படுவனவே தவிர, படிக்கப்பெறுவனவல்ல என்பதை உணரலாம். 8.4. ஆசிரியர்கள் : அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, கூர்மாவதாரன் வர்ணிப்பு ஆகியவற்றைப் பாடிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. ஆய்வாளர் ஒலிப்பதிவு செய்த நான்கு வர்ணிப்புகளில் மூன்றில் ஆசிரியர் பெயர் பாடலுக்குள்ளேயே வரு கின்றது. ராக்காயி வர்ணிப்பினையும் (8) பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பினையும் (9) மொட்டையக்கோன் என்பவர் பாடியுள்ளார். வலையன் கதை வர்ணிப்பினைப் (10) பாடியவர் பொன்னுசாமி வித்துவான் என்பவர் ஆவார், அச்சிடப் படாத அழகர் வர்ணிஃபின் (7) ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஸ்ரீ கள்ளழகர் பக்தர்கள் வர்ணிப்பாளர்கள் மகாசபையின் வரவு செலவுப் புத்தகத்தில் 'வர்ணிப்பு உபாத்தியாயர்கள்' எனப் பதினொருபேர் குறிக்கப்பட்டுள்ளனர்.2 1. கருப்பணப்புலவர், 2. நாகலிங்கக்கோன், 3. மொட்டையக்கோனார். 4. ஆறுமுகக்கோ னார். 5. ராசாக்கோனார். 6. முத்திருளமாமலை நாடார், 7. மகாலிங்கம் பிள்ளை, 8. வீரணன் கோடாங்கி, 9. கன்னையாக் கோனார், 10. வீரையாபிள்ளை, 11. ஸ்ரீகுழந்தைதாசர் ஸ்ரீ வெங் கடேஸ்வரர் ஆகியோர் மகாசபைப் புத்தகம் குறிக்கும் ஆசிரியர் களாவர். இவர்கள் தவிர முற்குறித்த இராமசாமிக் கவிராயர் மொட்டையக்கோனாரின் சிஷ்யர் சாமிக்கண்ணுக்கோனார், மூக்கள் பெரியசாமிக்கோனார் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். மூக்கன் பெரியசாமிக்கோனார் தவிர யாரும் தற்போது உயிருடன் இல்லை. வாய்மொழிச் செய்திகளின்படி இவர்களனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/175&oldid=1468046" இலிருந்து மீள்விக்கப்பட்டது