பக்கம்:அழகர் கோயில்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

170 அழகர்கோயில் புத்தகத்திலிருந்து முசுலிம்களிடத்திலும், கிறித்தவர்களிடத்திலும் கூட இவர்கள் வசூல் செய்திருப்பது தெரிகிறது. இச்சபையின் 1978 ஆம் ஆண்டு வசூல் வரவு 5011 ரூபாய் செலவு 4264 ரூபாய். திருவிழாவுக்கு ஒருமாத காலம் முன்னும் பின்னுமாக ஆண்டுக்கு இரண்டு கூட்டங்கள் நடைபெறுகின்றன. சபைக்கு வேறு அலுவல்கள் இல்லை. புதிய தலைவர், 18.6.1978 இல் நடத்திய சிறப்புக்கூட்டத்தில் ஆய்வாளர் கலந்துகொண்டபோது, அங்கு கூடிய அனைவருமே வர்ணிப்பாளர்கள் நாம் என்பதை அறியமுடிந்தது. ஆயினும் ஒரு பாடலினை முழுவதும் பாடத்தெரிந்தவர்கள் அங்கு விரல்விட்டு எண்ணுமளவிலேயே இருந்தனர். ஒன்றிரண்டு வர்ணிப்பு நூல்கள் அச்சேறியவுடன் இவர்களில் வாசிக்கத் தெரிந்தவர்கள் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டனர். எனவே அச்சேறாத பாடல்களையும் மறந்துவிட்டனர். சாமி இறக் குவதற்கும் ஒருசில அடிகளே போதுமானதாகி விடுகின்றன. மேலும் திருவிழாக் காலங்களில் மட்டுமே இப்பாடல்கள் நினைக்கப்பட வேண்டியதிருப்பதால் இவர்கள் பாடல்களை மறந்துபோவது எளிதாயிற்று. எனவே அச்சேறாத பல வர்ணிப்புகள் மறைந்து விட்டன. இதன் விளைவாகப் பெரும்பாலோர் முன்னும் பின்னும் தொடர்பில்லாத சில அடிகளையே திரும்பத்திரும்பப் பாடிவருகின் றனர். பிறவிக் குருடரான மாரியப்பன் என்பவர் மட்டும் வர்ணிப் புப் பாடல்களைப் பாடுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருவரே பாடல்களை முழுமையாகவும் தெளிவாகவும் பாடு கிறார். தொழில்முறைப் பாடகராக வேறுயாரும் இல்லை. நாற்பத்திரண்டுபேர் கூடிய இக்கூட்டத்தில் இவர்கள் அனை வருமே நடுத்தர வயதினராகவும், முதியவர்களாகவுமே உள்ளனர். இளைஞர்கள் பாடுவதை நாகரிகக்குறைவு எனக் கருதுகின்றனர் எனச் சங்கத் தலைவர் கூறினார். அனைவரும் நெற்றியில் தென் கலைத் திருாண் (திருநாமம்) அணிகின்றனர்; சாதி வேறுபாடுகள் கருதப்படுவதில்லை. ஆயினும் 'கோனார்' சாதியினர் கணிசமாக உள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/177&oldid=1468048" இலிருந்து மீள்விக்கப்பட்டது