பக்கம்:அழகர் கோயில்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 171 குறைந்த அளவு பள்ளிக்கல்வி உடையவர்களாகவே அனை வரும் காணப்படுகின்றனர். பெரும்பாலோர் விவசாயிகள்; சங்கத் தலைவர் கிராமமுனிசீப் ஆகவும், மற்றெருவர் அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராகவும் பணியாற்றுகின்றனர் அனைவருமே மதுரைக்குப் பத்து மைல் சுற்றளவில் வசிப்பவர்களே என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். 8.6. வர்ணிப்புகளின் மூலம்: ஒன்றுக்கு மேற்பட்ட வர்ணிப்புக்களைக் காணும்போது இவ் வகையான பாடல்நூல்கள் தமிழில் எங்கிருந்து இவ்வடிவத்தைப் பெற்றன என்பது இயல்பாகவே எழும் கேள்வியாகும். 'வர்ணிப்பு' என்ற தனிச் சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்ததாகத் தெரிய வில்லை. ஆயினும் இப்பாடல்கள் பிற எல்லாவகையிலும் மரபு வழிப்பட்டன என்பதால் இவற்றின் வடிவ மூலமும் தமிழில் இருக் கலாம் என்று எதிர்பார்க்கலாம். 8.7. வர்ணிப்பாளர் கருத்து : வர்ணிப்பாளர் மகாசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதியவர்ணிப்பாளர், 'சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மா னைதான் வர்ணிப்புகளுக்கெல்லாம் மூலம்' என்று கூறினார்.* இவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். எனவே இவர் பாகவத அம்மா னையைப் படித்திருக்க இயலாது. எனவே இச்செய்தி வர்ணிப்பாளர் களிடையே செவிவழிச் செய்தியாகவே நிலவியிருக்க வேண்டும். எனினும் இவர் கூற்று ஆய்விற்குரியதே. 8.8 பாசுவத அம்மரனை : ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஒன்பது கந்தங்களை மு. மாரியப் பக்கவிராயர் என்பவர் தமிழில் அம்மானையாகப் பாடினாரென்றும், பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் கந்தங்களை சங்கரமூர்த்திக் கோனார் பாடினாரென்றும், சங்கரமூர்த்திக்கோனார் பாடிய ஸ்ரீமத் பாசுவத அம்மானையின் வெளியீட்டாளர் தரும் குறிப்பால் அறிய முடிகிறது. சங்கரமூர்த்திக்கோனார் பாகவத அம்மானையினைப் பாடி, சகம் 1739 இல் (கி. பி. 1817இல்) மதுரை யாதவர்கள் ராமாயணமண்டபத்தில் (வடக்குமாசி வீதியிலுள்ளது) 'சொர்க்க வாசல் ஏகாதசி" (வைகுண்ட ஏகாதசி) யன்று அரங்கேற்றியுள்ளார்.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/178&oldid=1468049" இலிருந்து மீள்விக்கப்பட்டது