பக்கம்:அழகர் கோயில்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

172 அழகர்கோயில் இந்நூல் பாகவத அம்மானையின் இரண்டாம் புத்தகமாக 1932இல் இராம. குருசாமிக்கோன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்நூலின் சிறப்புப் பாயிரத்தால், சங்கரமூர்த்திக்கோனார் பாக வதத்தின் கண்ணன் திருவவதாரம் தொடங்கும் பத்தாம் சுந்தம் முதல் பன்னிரண்டாம் கந்தம் முடியப் பாடிய பின்னரே, மாரியப்பக் கவிராயர் முதல் ஒன்பது கந்தங்களைப் பாடினார் என்ற செய்தியை அறிகிறோம். மாரியப்பக்கவிராயர் பாடிய நூல் இப்போது கிடைக் கவில்லை. 8.9. பாசுவத அம்மானை அமைப்பு: சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை முதனூலோ. வழிநூலோ, தழுவல் நூலோ அன்று. செவ்வைச்சூடுவார் இயற்றிய பாகவதத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் கந்தங்களில் உள்ள 82 அத்தியாயங்களின் 2335 பாடல்களையும் வரிசை பிறழாமல் மிகக்குறைந்த எழுத்தறிவுடையோரும் புரிந்துகொள்ளும்படி எளிய நடையில் பாடியுள்ளார். எழுத்தறிவில்லாதவரும் இதை வாசிக்கக் கேட்டால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். சில இடங்களில் சில நிகழ்ச்சிகளைத் தன் சொத்தக் கவிதை யால் வருணித்துள்ளார். நாற்பது. ஐம்பது அடிகளுக்கொருமுறை செவ்வைச்சூடுவார். பாகவதத்தின் கதைத்தொடர்புடைய விருத்தத்தை அப்படியே கொடுத்துள்ளார். இனி எடுத்துக்காட்டு களோடு இவற்றைக் காணலாம். தொடக்கம் : ஒரு "பருதி வானவன் மரபொடு பானிலாந் திங்கள் மரபு கேட்டவேன் மன்னவன் மதிமர புதித்த ஒருத னிச்சுடர் திருவிளை யாட்டெலாமுள்ளம் தெருளக் கேட்பது விரும்பினன் செப்பலுற் றனளால் (பாகவதம்) ரியன்றன் வங்கிஷத்தும் சந்திரன்றன் வங்கிஷத்தும் சீரியன்ற வேந்தர் செயலெல்லாங் கேட்டமன்னன் சந்திர குலத்தில் தயவாக வந்துதித்த செந்திருமால் செய்யும் திருவிளையாட் டத்தனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/179&oldid=1468050" இலிருந்து மீள்விக்கப்பட்டது