பக்கம்:அழகர் கோயில்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் படல்கள் 8.10. பாகவத அம்மானையும் வர்ணிப்புப் பாடல்களும் : 175 இனி, பாகவத அம்மானைக்கும் வர்ணிப்புப் பாடல்களுக்கும் உள்ள தொடர்பினைக் காண முற்படவேண்டும். 1. சங்கரமூர்த்திக்கோனார் பெயரும், அவர் அம்மானை என்ற பெயரில் திருமாலின் கதையினைப் வர்ணிப்புப் பாடலில் பேசப்படுகிறது. பாடிய செய்தியும் கொங்கார் துலவணிந்தோன் (Sic) சுதையை அம்மாணை (Sic) யதாய்க் குவலயத்திலே வகுத்த சங்கரமூர்த்திக்கோன் பாதார விந்தமதைச் சாஸ்டாங்கமாய்ப் (sic) பணிந்தேன்"" என ஸ்ரீ கள்ளழகர் அட்டாக்கரமந்திர வர்ணிப்பு ஆசிரியர் அவை நுடக்கம் கூறுகிறார். அவையடக்கப் பகுதியில் வரும் இவ்வடிகள் குருவணக்கம் போல அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2. கண்ணன் திருவவதார நாளை, 'ஒளிமணி வண்ணத்தண்ணல் உதித்தன னுரோணிதன்னில்18 எனச்செவ்வைச்சூடுவார் பாகவதம் கூறும். சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை இச்செய்தியினை,

  • ஆவணி மாதத்தி லமரபக்ஷத் தஷ்டமியில்

மேவு முரோகணியில் மீறிடப லக்கினத்தில்,ம என மாதமும், பட்சமும் (பிறை), திதியும் (பிறைநாள்), லக்னமும் (ஓரையும்) கூறி விரித்துப் பாடும் வர்ணிப்பு ஆசிரியர்கள் இந்த அடிகளை அப்படியே எடுத்தாளுகின்றனர். ஆவணி மாதத்தில் காயாம்புமேனி அமரபட்சத் தட்டமியில் மேவு முரோகணியில் நீலமேகசுவாமி மீறிடப லக்கனத்தில் 20 (ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு)

  • ஆவணி மாதத்தில் அமரபக்ஷத் தட்டமியில்

அவதாரஞ் செய்வதற்கு ' 2 (பெரிய அழகர் வர்ணிப்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/182&oldid=1468055" இலிருந்து மீள்விக்கப்பட்டது