பக்கம்:அழகர் கோயில்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 177 பாகவத அம்மானை ஆசிரியர் நிகழ்ச்சிகளையும் காட்சிக ளையும் வருணிப்பதிலும் வர்ணிப்புப்பாடல் ஆசிரியர்களுக்கு வழி காட்டியுள்ளார். செவ்வைச்சூடுவார் பாகவதப் பாடல்கள் தரும் செய்திகளை எளிய நடையில் கவிதையாக்கிய பின் அவற்றைத் தமது கவிதையில் பாகவத அம்மானை ஆசிரியர் சில இடங்களில் விரித்து வருணித்துள்ளார். அவ்வகையிலமைந்த ஒரு பகுதியை வர்ணிப்புப் பாடல்களோடு ஒத்திட்டுக் காண்பது இக்கருத்தை நன்கு விளக்கும். தேவகியைத் திருமணப்பெண்ணாக அலங்கரித்த நிகழ்ச்சியைப் பாகவத அம்மானை ஆசிரியர் வகுணிக்கிறார் இது செல்லைச் சூடுவார் பாகவதத்தில் இல்லாத வருணனையாகும்.

  • சொருகுங் குழலில்முத்துத் தொங்கலிட்டுக் குப்பியிட்டு நெற்றிக்கிப் (Sic) பொட்டுமிட்டு நீள்விழிக்கி (Sic) மையுமிட்டு

வெற்றிப்பிறைபோல் விளங்கு முருகுமிட்டு காதுக்குத் தோடுமிட்டு கற்பதித்த கொப்புமிட்டு சோதிக் குமிழ்மூக்கிற் தூக்குமூக் குத்தியீட்டார் முந்துச்சரமும் முழுப்பவளத் தாவடமுங் கொத்துச் சரப்பளியும் கோர்வையதாய் மார்பிலிட்டார் மாதனத்தால் வாடும் மருங்கிலொட்டி யாணமிட்டு பாதசரந் தண்டையொடு பாடகமுங் காலிலிட்டார் 25 முருகு, கொப்பு முதலிய காதணிகள் இன்று பெரும்பாலும் பிற்பட்ட சாதியார் அணியும் நகைகள் ஆகும். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் தன்மையையே தம் காவியப் பாத்திரத்துக்கும் எற்றிக் காட்டுகிறா ரேயன்றி 'உயர்ந்த' சாதியினராகக் கற்பனை செய்யப் பாகவத அம்மானை ஆசிரியரால் இயலவில்லை. இனி 'அலங்கரித்தல்' என்ற நிகழ்ச்சி வர்ணிப்புப் பாடல் ாண்போம். களில் எப்படிக் காணப்படுகின்றது என ஒத்திட்டுக் அழகராகிய திருமால், மதுரைக்குப் புறப்படும்முன் அவரை அலங்கரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியினை. "இரண்டு செவிகளுக்கும் எயிரக் கடுக்கள் இசையும்படி தானணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/184&oldid=1468057" இலிருந்து மீள்விக்கப்பட்டது