பக்கம்:அழகர் கோயில்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 அருசைகோலில் புலவர்களுக்கு இவ்வகையில் பாகவத அம்மாளை வழிகாட்டியாக அல்லது முன்னோாயயாக அமைந்திருக்கலாம். 8.12. அழகர் வர்ணிப்புகள்: - பெருமளவு பெயர்பெற்றதும், பெரும்பாலோரால் பாடப் படுவதும் அச்சிடப்பட்டுள்ள 'அழகர் வர்ணிப்பு' என்ற பாடலே. சென்னை ஆவணக்காப்பகக் குறிப்புக்களிலிருந்து (Madrs Archives) இந்நூல் கி.பி 1889இல் இராமசாமிக்கவி என்பவராலும், கி.பி.1894 இல் பெரியசாமிப்பிள்ளை என்பவராலும் அச்சிடப்பட்டு வெளியிடப் பெற்ற செய்தி தெரிகிறது. ஆனால் ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பதிப்பாண்டு இல்லாத அழகர் வர்ணிப்புப் பதிப்புக்களிலும் ஆசிரியர் பெயர் இல்லை. அச்சிடப்பட்டுள்ள அழகர் வர்ணிப்பு பெருங்குடி கருப்பண தாசன் எழுதியது என்றும், அவர் அரிசன வகுப்பினர் என்றும் வர்ணிப்பாளரான ஒரு தகவலாளி கூறுகிறார்.31. 8.13. அமைப்புமுறை':' அழகர்கோயிலிலிருந்து சித்திரைத் திருவிழாவிற்காக மதுரை நோக்கிப் புறப்படும் இறைவனின் அலங்காரம், தல்லாகுளத்தில் ஏறிவரும் சப்பரத்தின் அலங்காரம், குதிரை வாகனத்தின் அலங் காரம் ஆகியவற்றை அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு (1) பலபட் வருணிக்கும்: இடையிடையே திருவிழாவின் பிற நிகழ்ச்சிகளான திரியாட்டக்காரர் சாமியாடுதல், குறி சொல்லுதல் ஆகியவற்றையும், வழியிலமைந்த பெரிய திருக்கண்களின் பெயர்களையும் குறிப்பிடு கிறது வண்டியூருக்கு அழகர் ஊர்வலம் சென்று சேரும் வரையுள்ள நிகழ்ச்சிகளை விரிவாகவும் திரும்புவதைச் சுருக்கமாகவும் இப்பாடல் வருணிக்கிறது. அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பு (7) திரியாட்டக் காரர் சாமியாடுதல், குறி சொல்லுதல் ஆகியவற்றை மட்டும் பாடவில்லை. இவை தவிர அச்சிடப்பட்ட (எண். 1), அச்சிடப்படாத (எண். 7) இரண்டு அழகர் வர்ணிப்புகளும் ஒரே போக்கில்தான் அமைந்துள்ளன. 5.14. வேறுபாடு : அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பு ஒரு செய்தியினைப் புதிதகாக் கூறுகிறது. 'பிரிட்டிஷார் கமிட்டியார் போலீசார் சூழ்ந்துவா' அழகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/189&oldid=1468062" இலிருந்து மீள்விக்கப்பட்டது