பக்கம்:அழகர் கோயில்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 183 ஊர்வலம் சென்றது எனக் குறிப்பிடுகிறது. 32 பாடலின் போக்கில் இவர்கள் ஊர்வலப் பாதுகாப்புக்காக உடன் வந்ததாகவே தெரிகிறது. வேறு பொருள்கொள்ளுமாறு இல்லை. 8.15. பிற வர்ணிப்புகள் : 1. ஸ்ரீகள்ளழகர் அட்டரக்கர மத்திர வர்ணிப்பு : மிக அண்மையில் (1979) வெளிவந்த இவ்வர்ணிப்பு நூலின் பெயருக்கும் பாடலுக்கும் தொடர்பில்லை. திருவிழா நிகழ்ச்சிகளை இவ்வர்ணிப்பு பாடவேயில்லை. "ஓம் நமோ நாராயணா" என்னும் அட்டாக்கர மந்திரம், நூலின் முதலடியாக வருவதைத்தவீர மந்திர விளக்கம் எதுவும் இல்லை. திருமாலைப் பல பெயர்கள் சொல்லிப் போற்றித் துதிக்கும் பாடலாக மட்டும் இது விளங்குகிறது. நூலிலுள் ளும் அட்டாக்கர மந்திர விளக்கம் ஏதும் தரப்படவில்லை. 2. கூர்மாவதாரன் வர்ணிப்பு : இந்நூலை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வர்ணிப் டிப் பாடல்களில் 'அளளிற் சிறியதும் இதுவேயாகும். நாட்டுச்சிறப்பு என்ற தலைப்பில் நூலின் தொடக்கத்தில் 28 கண்ணிகள் அமைந் துள்ளன. அவற்றுள் பத்து இடங்களில் திருமால் ஆய்ப்பாடியில் வால், தயிர், வெண்ணெய் உண்டு வளர்ந்தவனாகக் குறிக்கப் படுகிறான். அதன் பின்னரே தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடையும்போது திருமால் ஆமையாக நின்று மந்தரமலையை மத்தாகத் தாங்கியது. மோகினி வடிவில் அமுதம் பரிமாறியது ஆகிய செய்திகள் பேசப்படுகின்றன. 3. கீருஷ்ணாவதாரன் வர்ணிப்பு : இதுவும் ஆசிரியர் பெயர் தெரியாத நூலே. கண்ணன் பிறப்பு, கஞ்சன் ஆலோசனை, கண்ணன் ஆய்ப்பாடி வருதல், மண்ணை யுண்டல், மருதிடைத் தவழ்தல், மாடு மேய்த்தல், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், காளிங்க நர்த்தனம், கோவியர் துகில் கவர்தல், வடமதுரை செல்லல், கஞ்சன்வதம். பாரதப்போர் ஆகிய நிகழ்ச்சிகளைப் பாடியபின் அழகர்மலைச் சிறப்புத் தொடங்கிப் பின்னர் அழகர் வர்ணிப்பைப் போலத் திருவிழா நிகழ்ச்சிகளைப் பாடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/190&oldid=1468063" இலிருந்து மீள்விக்கப்பட்டது