பக்கம்:அழகர் கோயில்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 185 இரண்டு பகுதிகளையும் சேர்த்து அச்சிட்டதற்கு வெளியீட்டாளரின் வணிக நோக்கம் தவிர வேறு காரணம் காணமுடியவில்லை. 6. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு களஆய்வில் கிடைத்த இவ்வர்ணிப்பு அச்சிடப்பெறாதது. அழகர்கோயிலில் பதினெட்டாம்படிச் சன்னிதி ஏற்பட்டது குறித்து மக்கள் வழக்கில் உள்ள கதையே இவ்வர்ணிப்பின் பாடுபொரு ளாகும். இராமசாமிக்கவிராயரின் பெரிய அழகர் வர்ணிப்பும் 'பதி னெட்டாம்படி உண்டான விசேடம்' என்ற தலைப்பில் இக்கதையைச் சுருக்கமாகப் பாடுகிறது. 7. ராக்காயி வர்ணிப்பு : ராக்காயி அம்மன் அழகர்மலையில் சிலம்பாற்றின் கரையிலுள்ள ஒரு சிறுதெய்வமாகும். இப்பாடல் ராக்காயி தன் குழந்தைகளுடன் தன் தமையனான பதினெட்டாம்படிக் கருப்பனைப் பார்க்க வரும் நிகழ்ச்சியை மட்டும் விரித்துப் பாடுகிறது. கருப்பசாமி அவளுக்குக் காட்சி கொடுக்கிறார். 'ஜெகநாதன் தங்கச்சி' என இவ்வர்ணிப்புப் பாடல் அவளைத் திருமாலுக்கும் நங்கையாகக் குறிப் பிடுகிறது. களஆய்வில் கிடைத்த இவ்வர்ணிப்பும் அச்சிடப்பெறா ததேயாகும். 8. வலையன் சுதை வர்ணிப்பு : இவ்வர்ணிப்புப் பாடல், ஒரு வலையன் அழகர்மலை அடி வாரத்தில் கிழங்கு தோண்டும்போது அந்தக் குழியிலிருந்து அழகர் கோயில் இறைவன் வெளிப்பட்டார் என்ற செய்தியை வருணிக் கிறது. 9. கருப்பசாமி வர்ணிப்பு : தொடக்கமும் முடிவும் இல்லாத கையெழுத்துப்படி வாக ஆய்வாளர்க்குக் கிடைத்த இவ்வர்ணிப்பு அழகர்கோயிலில் ஆடிமாதம் பௌர்ணமி நாளில் கருப்பசாமியாக வழிபடப்பெறும் கதவுகளுக்குச் சந்தனம் பூசும் நிகழ்ச்சியை வருணிக்கிறது. 8.6, அவதார வர்ணிப்புகள் பிறப்புக் காரணம் : இராமசாமிக்கவிராயரின் பெரிய அழகர் வர்ணிப்பு ஆற்றி லிறங்கிய மறுநாள் இரவு அழகர் ராமராயர் மண்டபத்தில் பத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/192&oldid=1468065" இலிருந்து மீள்விக்கப்பட்டது