பக்கம்:அழகர் கோயில்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 187 கவும் காவியமாகவும் அமைக்கும். மரபு வடமொழி இலக்கிய வர லாற்றில் போற்றப்பட்டு வந்த ஒன்றாகும். இன்னறு அமைக்கும் காவியங்களுக்குக் 'கண்டகாவ்யம்' (காளியத் துண்டங்களி) எனப் பெயர். தமிழில் நளவெண்பா, இரணியவதைப்பரணி, பாரதியின் பாஞ்சாலி சபதம் ஆகியன இவ்வகையினவாகும். ஆயினும் தமிழ் எழுத்திலக்கியங்களைவிட, நாட்டுப்புற இலக்கியங்கரில் கண்ட காவியம் பாடும் இம்மரபு செல்வாக்கோடு திகழுகின்றது. மேற் குறித்த இலக்கியங்கள் அதற்குச் சான்றாகும். முடிவுரை : சித்திரைத் திருவிழாவோடு இணைத்துவரும் மதுரை மீனாட் சியம்மன் கோயில் திருவிழாவில் மீனாட்சியம்மன் பட்டம் சூடுதல், திருமணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந்திர ளாகக் கூடுகின்றனர். ஆயினும் அக்கூட்டத்தினர் பெரும்பாலும் நகரமக்களே. அவர்கள் வர்ணிப்புப் பாடல்களைப் பாடுவதில்லை. பீனாட்சி திருமணம்' என்றொரு வர்ணிப்புப் பாடல் இருந்தாலும் இதுவுங்கூட இத் திருவிழாவில் யாராலும் பாடப்படுவதில்லை. வர்ணிப்புப் பாடல்களைப் படைப்போடும் படிப்போரும், கேட்போரும் நாட்டுப்புற மக்களேயாவர். அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவிலேயே வர்ணிப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன; பிற திருவிழாக்களில் பாடப்படுவ தில்லை. வள்ளிப்புப் பாடல்கள் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக மதிக்கத்தகுந்தவை. ஆயினும் பிற சிற்றிலக்கியங்கள் இலக்கியப் பயிற்சியும் எழுத்தறிவும் பெற்றவர்களாலேயே படைக்கவும் சுவைக் கம்படுவன. வர்ணிப்புப் பாடல்கள் நாட்டுப்புற மக்கள் இலக்கியமாகத் தோன்றி வளர்ந்திருக்கின்றன. பாகவத அம்மானை வைணவச் சார்பாளதால், அதனைப் பெருமளவு பின்பற்றி எழுந்த சார்பானவையாயின. அழகர் வர்ணிப்புப் பாடல்களும் வைணவச் கோயிலை வழிபடும் அடியவர் கூட்டந்தின் பரப்பும், இக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளும் வர்ணிப்பு இலக்கியம் வளரப் பெருங்காரணங்களாயின. குறிப்பிட்ட ஒரு கோயில் சிற்றிலக்கிய பெறுவது என்பது வகையொன்றின் வளர்ச்சியில் பெரும்பங்கு அழகர்கோயில் பெற்ற தனிச்சிறப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/194&oldid=1468067" இலிருந்து மீள்விக்கப்பட்டது