பக்கம்:அழகர் கோயில்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயில் 192 மதுரை தல்லாகுளம் பகுதிக்கு வந்துசேரும் அழகர் ஐந்தாம் நிரு நாளன்று அதிகாலையில் வையை நதியில் இறங்குகின்றார். மீனாட் சியம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் மதுரை நகருக்குள் வையை நதிக்குத் தென்புறத்திலேயே முடிந்துவிடுகின்றன. வையை நதிப் படுகையிலும் நதிக்கு வடகரையிலும் அழகர்கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதில் நகரமக்கள் பெரும்பகுதி யினரும், பின்னதில் நாட்டுப்புற மக்கள் பெரும்பகுதியினரும் கலந்து கொள்கின்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னதோ நாட் டுப்புற மக்களின் விழா. 1961 ஆண்டு சென்சஸ் கணிப்பும் இத்திரு விழாவினை ஆராய்ந்த டென்னிஸ் அட்சனும் இத்திருவிழாவினை இவ்வாறே மதிப்பிடக் காணலாம்.5 9.4. கோலம் பூண்டு வழிபடல் : இத்திருவிழாவில் அழகராகிய திருமாலை நாட்டுப்புற அடியவர்கள் கோலம் பூண்டு (வேடமிட்டு) வழிபடும் முறைகளே முதலில் நம் கருத்தைக் கவர்வன. இவ்வாறு வழிபடுவோர்களை 1.திரியெடுத்தாடுவோர். 2. திரியின்றி ஆடுவோர், 3. சாட்டை அடித் தாடுவோர், 4. துருத்திநீர் தெளிப்போர் என நான்கு வகையின சாகக் காணலாம். ஆண்கள் மட்டுமே இவ்வாறு வேடமிட்டு வருகின்றனர். விதிவிலக்காக 1979ஆம் ஆண்டு சீத்திரைத் திருவிழாவில் நேர்த்திக் கடனுக்காகத் துருத்திநீர் தெளிப்போரில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி வேடமிட்டிருந்ததை ஆய்வாளர் காணமுடிந்தது. எனவே பெண்கள் வேடமிட்டு வழிபடுவது இயற்கைத்தடை (menstustion) தவிரப் பிற காரணங்களால் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல எனத் தெரிகிறது இருப்பினும் வழிபட வரும் பெண்கள் அழகர் கோயிலில் பதினெட் டாம்படிக் கருப்பன் சன்னிதியிலும் கோயிலுக்குள் சன்னிதிக்கெதிரில் தொண்டைமான் கோபுர வாசலிலும் திடீரென்று சாமியாடுகின்றனர்; ஆனால் பொதுவாக வேடமிட்டு வருவதில்லை. அனை வேடமிட்டு வழிபடும் அடியவரிடத்தில் அவர்கள் வெவ்வேறு வேடமிட்டிருந்தாலும், சில பொதுக்கூறுகள் உண்டு. 1. வகும் நெற்றியிலும் மார்பு, புயங்கள் முதுகுப் பகுதிகளிலும் தென் கலை வைணவத் திருநாமங்கள் இட்டுள்ளனர். 2. அனைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/199&oldid=1468072" இலிருந்து மீள்விக்கப்பட்டது