பக்கம்:அழகர் கோயில்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 195 பாடுகிறார். எனவே தலைமுடியினையோ அல்லது தலைமீது வைக்கும் மகுடத்தையோ கொக்கிறகினால் அணிசெய்வது பழங் காலத்து வழக்கங்களில் ஒன்றெனத் தெரிகிறது. 9.4.1.1. திரியெடுத்து ஆடுவோர் : கையில் இடுப்பில் கச்சை எனப்படும் சிவப்புநிற அரைக்காற்சட்டை அதன் மேல் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் 'கருங்கச்சை எனப்படும் பட்டித்துணி (belt), தலையில் முக்கோன வடிவல் அமைந்த சிவப்பு நிறமுடைய 'லேஞ்சி' எனப்படும் சிறியதுண்டு. உடம்பிலும் நெற்றியிலும் தென்கலைத் திருநாமங்கள், குறைந்தது மூன்றடி உயரமுள்ள (பெரும்பாலும் ஒரு சாட்டைக் கயிறு ஈற்றப்பட்ட) திரி, காலில் கனத்த தண்டை-இதுவே இவர் களின் கோலமாகும் (படம்: 20-22). கையிலுள்ள திரி மூன்றடி யிலிருந்து ஐந்தடி உயரத்தில், ஒன்பது அங்குலம் முதல் பதினைந்து அங்குலம் விட்டமுள்ளதாக அடிப்பகுதி சற்றும் சிறுத்து அமைத் திருக்கும் கழிவுநூல் அல்லது தையற்கடை வெட்டுத்துணிகளையும், சிறு குச்சிகளையும் ஒரு நீண்ட துணிப்பையில் நெருக்கமாகத் திணித்து அதன் மேல் மஞ்சள்துணி சுற்றப்பட்டிருக்கும். அதன் மேல் தடித்த நூல் அல்லது சணலால் நைக்கப்பட்டிருக்கும். திரியின் மேற்பகுதியில் எண்ணெய் ஊற்றி, அது ஊறியபின், நெருப்பினை எரியவிட்டு, இடுப்பில் இடுக்கிப் பிடித்துக்கொண்டு, மேளம், பறை, சேகண்டி, சங்கு ஆகியவை முழங்க ஆடுகின்றனர். கிராமப்புறங்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சறியார் வாசிக்கும் திமிரி அல்லது ஊதி எனப்படும் ஒருவகைச் சிறிய நாதசுரத்தினை யும் சிலர் மேனத்துடன் சேர்த்துக்கொள்கின்றனர். ஒரு கிராமத் தைச் சேர்ந்த நால்வர், ஐவர் சேர்ந்தாற்போல ஆடிவருகின்றனம், கிராமத்தவர்கள் ஒன்றாக உடன்வரவும், மேளக்குழுவின் செலவு களைப் பகிர்ந்துகொள்ளவும் இம்முறை அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. திரியெடுப்போர்கள், அழகர்கோயிலில் பதினெட்டாப்படிச் சன்னிதிக்கெதிரிலுள்ள மண்டபத்தில் அமர்ந்திருக்கும் ஆண்டாரை வணங்கிப் பூ முத்திரையோ அக்கினி முத்திரையோ பெற்றுர் கொண்டு அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனா, பின்னக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/202&oldid=1468075" இலிருந்து மீள்விக்கப்பட்டது