பக்கம்:அழகர் கோயில்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 அழகர்கோயில் பதினெட்டாம்படிச் சன்னிதியிலும், அழகர்கோயில் இறைவன் சன்னிதியிலும் இவர்கள் 'மருள்ஏறி' (அருள் இறங்கி - possessing tbe divine spirit) ஆடுகின்றனர். அழகர் 'மதுரைக்கு 'வந்துசேரும் நாளன்று இரவில் தல்லாகுளம் கோயிலுக்கெதிரிலுள்ள திடலிலும் சாலையிலும் இவர்கள் மருளேறி ஆடிப் பலருக்கும் குறி சொல்லிச் கொண்டிருப்பதனைக் காணலாம். இரவு நேரத்தில் இவ்ர்கள் கையில் எரியும் திரியேந்தி ஆடுவதனை, 'அங்கிக் கடவுளும்வந் தன்பருடன் ஆடுதல்போல் 'திங்கட் கடவுள்சே' விப்பதுபோல்--கங்குற். கரதீபமும் வாணக்காட்சியும்*9 என்று அழகர் கிள்ளைவிடு தூது குறிப்பிடுகின்றது. ஆனால் இவர்கள் ஆடும்போது குறி சொல்வதளைக் குறிக்கவில்லை.5 வாய்மொழிப் பாடலான அழகர் வர்ணிப்பு இவர்கள் குறி சொல்லும் முறையினை வருணிக்கின்றது. மக்கள் குறி, சொல்லீ வேண்டுமென்று திரியாட்டக்காரர் காலில் விழுகின்றனர். விழுந்ததொரு மானிடரை-அப்போது எழுந்திருக்கத் தானுரைத்து அழுத்தமுடன் சாமிதன்னை திரியாட்டக் காரா அன்பாய் வரவழைத்தார் விழித்துமே தான்பார்த்து அப்போது எரித்து வீடுவதுபோல் அழுத்தமுடன் சொல்லுகிறார் முன்னே அவர்செய்த குற்றமெல்லாம் முன்னோர்கள் தானடைந்த செய்கை முறைதவறி நீ நடந்தாய் என்னாளுமென்னை அடேயப்பா நீ பெரிதாய் நினைக்கவில்லை மாடுகன்று போட்டால் என்னைநினைத்துப் பால்வைத்துக் கும்பிடுவார் வீடுதளில் பொங்கலது மங்களமாக விரும்பியே போடுவார்கள் காடேயெடுத்த தினம் முன்னோர்கள் குப்பிட்டு ஆக்கிவைப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/203&oldid=1468076" இலிருந்து மீள்விக்கப்பட்டது