பக்கம்:அழகர் கோயில்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகாகோயில் 7.4.1 3 சாட்டையடித்து ஆடுவோர்: இவர்களும் திரியாட்டக்காரள் போலவே வேடமிட்டிருப்பர். தலையில் லேஞ்சிக்குப் பதிலாக உருமால அல்லது உருமால் போன்ற தலையாகை அணிந்திருக்கின்றனர். மாடுகளின் கழுத் தில் அணியும் பெருமணிச் சல்லடத்தை இடுப்பில் கட்டியுள்ளனர். அழகர்கோயில் வெளிக்கோட்டை வாசல் தொடங்கி பதினெட்டாம 11டிச் சன்னிதி வரை ஒரு பெரிய சாட்டையா தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு பறை, மேளம் முழங்க ஆடிவருகின் ரனர். பின்னர் பதினெட்டாம்படிச் சன்னிதியில் சாட்டையைத் தோளிலிட்டு. கையில் பெரிய அரிவாள் ஏந்தி, காற்சலங்கை ஓசையைவிட இடுப்புமணி ஓசை பெரிதாகக் கேட்குமாறு இடுப் பைக் குலுக்கி மருனேறி ஆடுகின்றனர். ஆட்டம் முன்னோக்கிய தாக இல்லாமல் பக்கவாட்டில் நகருவதாக அமைகிறது (படம்: 23). ஆவேசம் மிகுந்த கண்கள், துருந்திய நாக்கு, பக்கவாட்டில் திரும்பிய பார்வை, இடுப்புமணி ஓசையிட ஆடுதல் ஆகியவற்றால் வழிபடுவோரிடை. அச்சம் கலந்த பக்தியை விளைவிக்கும் ஆட்டம் இது. 94.1.4. துருத்தீந்ர் தெளிப்போர்: திருவிழாவில் கண்ணைக் கவரும் தோற்றமுடையோர்களில் ஒன்னொரு கூட்டத்தார் துருத்திநீர் தெளிப்போர்கள் ஆவர். சிறுசிறு குருகேவாக. எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படுவோரும் இளர்களே. தலையில் சரிகைக் கரையுடன் கூடிய உருமால், அதில் நற்றிக்கு நோவச் செருகப்பட்ட மயிற்பீலி அல்லது கொக்கின் இறது, நெற்றியிலும் உடம்பிலும் தென்கலைத் திருநாமங்கள், இடுப்பில் டி க்க லுக்குக் கீழே இறங்கிய கச்சை (இப்போது அதே ஜளவில் 'பேஸ்ட்' (pants) போலத் தைத்துக்கொள்கின்றனர்), அதற்கு மேலேயே பெருந்தொடைப்பகுதி வரையில் துணியாலான கச்சை (ஜட்டி போன்றது). காலில் சலங்கை, கையில் ஆட்டுத் தோல் செய்யப்பட்ட ஏறத்தாழ 4 லீட்டர் கொள்ளும் நீர் நிரம் ரிய தோற் (இதன் ஒரு மூலையில் பையை அழுத்தினால் ஜீரைப் பீய்ச் சிறு குழாய்), மார்பிலும் தோள்களில் குறுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/205&oldid=1468078" இலிருந்து மீள்விக்கப்பட்டது