பக்கம்:அழகர் கோயில்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 199 காவும் மிகப்பெரிய பூமாலைகள்- இதுவே இவர்களின் கோலமாகும் (படம்: 24-26). கச்சையும், கச்சைக்கு மேலுள்ள சிறு கச்சையும் மலிவான சரிகைகளால் அணிசெய்யப்பெற்றுள்ளன. சிலர் முகத்தில் அரிதாரம் பூசி, புருவங்களையும் மைதீட்டி அலங்கரித்துக்கொள்கின்றனர். ஐந்து, ஆறு வயதுடைய சிறுவர்களிலிருந்து முதியவர்கள் வரை இக்கோலத்தில் காணப்படுகின்றனர். வயதில் இளையலர்கள் இவ் வேடத்தில் மகிழ்ச்சியுடன் பங்குபெறுகின்றனர். சில இடங்களில் அழகர் வர்ணிப்பினைப் பாடிக்கொண்டு வட்டமாக நின்று ஆடுகின் றனர் {படம் : 27). ஆட்டம் எவ்வித ஒழுங்குமின்றி விருப்ப போல அமைகிறது. அழகர்கோயிலிலும், அழகர் மதுரைக்கு வந்துசேரும் இரவில் தல்லாகுளம் பகுதியிலும் இவர்கள் தரையிலும், கூட்டத்தினர்பிஓர் தண்ணீரைப் பீய்ச்சிக்கொண்டே வருவர். அழகர் ஆற்றிலிறங்கிய அன்று பிற்பகல் இராமராயர் மண்டபத்துக்குள் அழகள் சப்பரம் நுழையும்போது இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிநின்று அழகர் மீதும் சப்பரத்தின்மீதும் தண்ணீரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வீய்ச்சுவார்கள். இதுவே தண்ணீர் பீய்ச்சுதலின் உச்சக்கட்ட நிகழ்ச் சியாகும். இருபது ஆண்டுகட்கு முன்வரை இவர்கள் எல்லா இடன் களிலும் சப்பரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சுவதுண்டு. நிருவிழாக கூட்டத்தில் அமைதியை நிலை நாட்டவேண்டி இப்போது அழக. ஆற்றிலிறங்கிய அன்று பிற்பகல் இராமராயர் மண்டத்துக்கு நுழையுமுன்னர் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டும் சப்பரத தின்மீது தண்ணீர் பீய்ச்ச அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா நடைபெறும் சித்திரை மாதம் கடுங் கோடைக் காலமாதலால் அடியார்க்கு வெளியில் வருத்தம் ஏற்படாதிருக்கத் தரையிலும், இறைவனுக்குச் சூட்டியுள்ள பூமாலைகள் வாடிவிடா திருக்க அவ்வப்போது அவற்றின்மீதும் நீர் தெளிக்கும் வழக்கம் ஓர் இறைப்பணியாகத் தொடங்கப்பட்டு, பின்னர் இவ்வடிவம் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/206&oldid=1468079" இலிருந்து மீள்விக்கப்பட்டது