பக்கம்:அழகர் கோயில்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாளில் நாட்டுப்புறக் கூறுகள் திருமுட்டம் பூவராகப்பெருமாள் 'மரிமகன்' அக்கோயில் அர்ச்சகர் குறிப்பிட்டார். 20 209 என்றழைப்பதனை திருமாலின் தேவியான லெட்சுமி (அலைமகள்) திருப்பாற் கடலில் பிறந்தவள் என்னும் புராணமரபுச் செய்தியே, மீனவர் கள் லெட்சுமியை மகளாகவும். திருமாலை மருமகனாகவும் ஏற்கவைத்தது என்பதை எளிதில் ஊகிக்க முடிகிறது. மலைக்காடுகளில் வாழும் இருளர் முதல் கடற்கரையில் வாழும் மீனவர்கள் வரை எல்லாச் சாதியினரையும் -குறிப்பாக அன்றையச் சமூக அமைப்பில் ஒதுக்கப்பட்டவர்களைத் -- தமிழ் நாட்டு வைணவம் ஏற்றுக்கொண்டது. எனவே அவர்கள் விரும் பிய வழிபாட்டுநெறிகள் வைணவத்தில் இணைந்துவிட்டன. எனவே பெருந்தெய்வக் கோயில்கனான் வைணவக் கோயில்களில் சிறுதெய்வக் கோயில்களைப் போல. சாமியாட்டம் (acsiatic dance) குறி சொல்லுதல் முதலியவை நடைபெறத் தொடங்கிவிட்டன. 'குருபரம்பரை' வைணவர்களிடம் பெருமதிப்புப் பெருவது ஆகும். குருபரம்பரையினரான வைணவ ஆசாரியர்கள் இந்நெறி களை விரும்பி ஏற்றுக்கொண்டனரா அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒத்துக்கொண்டனரா என்பனதயும் நோக்கவேண்டும் 9.13. வைணவ ஆசாரியர்கள் ஏற்றமை: ஆண்டாளின் திருமாலிருஞ்சோலைப் பாசுரத்துக்கேற்ப, அழகர் சன்னிதியில் இராமானுசர் நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கூரவடிசிலும் படைத்து ஆண்டாள் வாக்கினை நிறைவேற்றிப் பின்னர் திருவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கு "ஆழ்வார் திருமகளாரை அடிவணங்கி நிற்க, கோதையும் குலமுதல் வனைக் குறித்துத் தம் ப்ரார்த்தனையைத் தலைக்கட்டினதற்கு மிகவும் உகந்து, 'நம் கோயிலண்ணர்' என்று அச்சக முகேத திரு நாமமும் ப்ராஸாதிக்க21 என்று ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம் இந்நிகழ்ச்சியை வருணிக்கிறது. மற்றுமொரு செய்தி, திருவரங்கத்து இறைவன் மணவாள மாமுனிகளைத் நிருவாய்மொழி ஈட்டினைக் காலேட்சபமாக நடத்த ஆணையிட்ட செய்தியினைக் கோயிலொழுகு இவ்வாறு தெரிவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/216&oldid=1468090" இலிருந்து மீள்விக்கப்பட்டது