பக்கம்:அழகர் கோயில்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் 215 ராமராஜ திருமலை தேவமகாராஜா காலத்தில் சோழியர், சாமானியர் ஆகிய இருவகைப் பிராமணப் பணியாளர்களுக்குமிடை யில் தொழில், உரிமைகள் ஆகியவை குறித்து ஏற்பட்ட சிக்கலில் இருதரப்பாரும் முன் மாவலி வாணாதிராயர் காலத்திலிருந்த நடை முறைப்படி நடந்துவரவேண்டுமென்று மன்னர் முன்னிலையில் தீர் மானிக்கப்பட்டது 3 பணியாளர்களின் தொழில், உரிமைகளைக் குறிக்கும் ஆவணம், இக்கல்வெட்டில் 'பாஷபத்ரம்' எனக் குறிக்கப் பட்டுள்ளது என்பர் ராதாகிருஷ்ணன்.4 இக்கல்வெட்டின் மூலம் வாணாதிராயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பணியாளர் தொழில் உரிமை நடைமுறைகளே. நாயக்கர் ஆட்சிகாலத்திலும் பின்பற்றப் பட்டுவந்தமையை அறியலாம். மற்றொரு கல்வெட்டு சகம் 1573இல் (கி.பி. 1651) திருமாலை ஆண்டார் ஐயங்காருக்கும், பட்டர் ஐயங்காருக்கும் (அர்ச்சகர்) தீர்த்தமரியாதை பெறுவதில் ஏற்பட்ட தகராற்றினை வைத்தியப்ப தீட்சதர், குப்பையாண்டி செட்டி, வசந்தராய பிள்ளை, திருவேங்கடன் ஐயன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தீர்த்து வைத்ததைத் தெரிவிக்கிறது. கி.பி. 1796இல் திருமாலையாண்டா ரால் தரப்பட்ட வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டயத்தின் நகல் ஓலையும், ஆண்டாருக்கும் பட்டருக்கும் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பாரும் அடித்துக்கொண்டதில் சிலர் இறந்துபோன செய்தியைத் தெரிவிக்கிறது.' எனவே இந்த இரு பணியாளர்க்கும் ஒரு நூற் றாண்டுக்கும் மேலாகவே பகைமை தொடர்த்துவந்திருக்கிறது என அறியமுடிகிறது. 10.3. தொழில், சுதந்திர அட்டவணை : இக்கோயிலின் பரம்பரைப் பணியாளர்களைப் பற்றி முழு மையாக அறிவதற்கு இப்போது கிடைக்கும் ஒரே ஆவணச்சான்று கி. பி. 1803 இல் எழுதப்பட்ட 'திருமாலிருஞ்சோலைமலை ஸன்னிதி கைங்கர்யபராளின் தொழில், சுதந்திர அட்டவணை'யாகும். 'திரு மாலிருஞ்சோலைமலை என்னும் அழகர்திருமலை சன்னிதிக்கி ஸ்ரீ காரியம் விசாரணை தர்மகர்த்தா மடாதிபதி ஸ்ரீராமானுஜஜீயர் ஸ்வாமிகள் கும்பினி சர்க்காரில் ஆக்ஞாபித்து உத்தரவாகி இருக்கிற பிரகாரம்'? எழுதிய இவ்வட்டவணை கி.பி.1937 இல் கோயில் அதிகாரியாயிருந்த கே. என். ராதாகிருஷ்ணனால் அச்சிடப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/222&oldid=1468096" இலிருந்து மீள்விக்கப்பட்டது