பக்கம்:அழகர் கோயில்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

216 அழகர்கோயில் டுள்ளது. கி.பி.1939 இல் கோயிற் பணியாளர்கள் இவ்வட்ட வணையின் சில பகுதிகளை எதிர்த்து அட்டவணையே செல்லாது' என வழக்குத் தொடர்ந்தனர். கி. பி. 1940 இல் இந்த அட்டவணை செல்லத்தக்கதன்று என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே இப் ாேது கோயிலில் நடைமுறையில் உள்ள உரிமைகளும் பொறுப்புக் களுமே பரம்பரைப் பணியாளர் பற்றி அறிவதற்கு முதற்சான்றாகும் 10.4. பணியாளர் சாதி: கோயில் பிராமணப் பணியாளரில் அர்ச்சகர் வைகானச ஆக மத்தைப் பின்பற்றுபவராவர். ஏனைய பிராமணப் பணியாளர்கள் பாஞ்சராத்திர ஆகமத்தினர். அவர்களிலும் சன்னிதி பரிசாரகம், நாச்சியார் பரிசாரகம் ஆகிய பணிகளிலுள்ள அமுதார் வழியினர் சாமானியர் எனும் பிராமணப்பிரிவைச் சேர்த்தவர்கள். ஏனையோர் சோழியப் பிராமணராவர். பிராமணரல்லாத பிரிவினரில் பண்டாரி 'சாத்தாணி' வகுப் பினர்; கணக்கர் வேளாளர். இந்த இரு வகுப்பினரும் புலால் உண்ணாத சாதியார் ஆவர். கொத்தன் தேவர் சாதியினர்; மேளம் வாசிப்பவர் மேளக்காரச் சாதியினர்; ஸ்ரீபாதம் தாங்கிகள் செங்குந்த முதலியார் சாதியினர். 10.5.மறைந்துபோன பணிப்பிரிவுகள் : கோயில் பணிப்பிரிவுகளில் சில காலப்போக்கில் மறைந்து விட்டன. கி.பி. 1939 இல் அரசு அதிகாரிகளோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஜீயர் பணியிலிருந்து விலகிவிட்டார். கி. பி. 1977 இல் ஆண்டார் பணிப்பிரிவில் திருமாலை ஆண்டார் நிருவாகம் வாரிசில்லாமல் பணியிலிருந்து நீங்கிவிட்டது. கோயில் நிலங்களை மேற்பார்வையிடும் திருவிளையாட்டான் நிருவாகத்தார் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பணியிலிருந்து நீங்கிவிட்டனர். கி.பி. 1939 இல் ஸ்தானாபதி நிருவாகத்தார் பணியிலிருந்து நீங்கி விட்டனர்.'திருமலை நம்பிகள் வழியினரிடமுள்ள ஓர் ஆவணத்தினால் கி.பி. 1915இல் சங்கரலிங்கம் என்ற நட்டுவனாரும், குட்டி, ரெங்கம், கருத்தபிள்ளை, முத்துசுந்தரி, திருமலைப்பொன்னாள். குப்பமுத்து ஆகிய ஆறு நடனமாடும் பெண்களும் (தாசிகள்) இக் கோயிலில் பணிபுரிந்த செய்தியை அறியமுடிகிறது. இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/223&oldid=1468097" இலிருந்து மீள்விக்கப்பட்டது