பக்கம்:அழகர் கோயில்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் 217 வாரிசற்றுப் போனதால். கோயில் மேலாளர் கி.பி.1864இல் சௌந்திரம் என்ற தாசியினை இப்பணிக்கு அமர்த்தியுள்ளார் 19 தாசி நடனம் சின்ன மேளத்துடன் சேர்ந்தது இக்கோயிலில் கி.பி. 1864 வரை நடைபெற்றுவந்த தாசி நடனம் நின்றுபோனது எப்போது எனத் தெரியவில்லை. 10.6. பிராமணப் பணியாளர் ஒரு செய்தி : அர்ச்சகப்பணியின் நான்கு நிருவாகக்காரர்களும் வெவ்வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாவர். அதைப்போலவே சன்னிதி பரிசாரகப் பணியின் பத்து நிருவாகக்காரர்களும் வெவ்வேறு கோத் திரத்தினவரே. கருவறையிலுள்ள திருமேனியோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட பணிப்பிரிவுகள் இவை. ஒரு குடுமபத்தில் பிறப்பு, பூப்பு, இறப்பினால் வரும் தீட்டுக்கள ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவாகும். எனவே ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இப்பணிப்பிரியின் நிருவாகக்காரர்கள் இருந்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் தீட்டு காரணமாக அப் பணிப்பிரிவினர் அனைவரும் தீட்டு கழியும்வரை கோயிற் பணியினைச் செய்யமுடி யாது, அதனைத் தவிர்க்கவே இந்த விதி வகுக்கப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களிலும், தேவைப்படும் பிறநேரங்களிலும் பிராமணப் பணிப்பிரிவினர் தங்களைப் போன்ற பிறப்பும் சமயக்கல்வித் தகுதியுமுடைய பிராமணல்களைத் துணைக்கு அமர்த்திக்கொள்ள உரிமையுடையவர்களாவர். 10.7. பணிப்பிரிவு-திருவாகம் இன்றைய நடைமுறை : பதினான்கு பணிப்பிரிவுகள், முப்பத்திரண்டு நிருவாகத்தார் என்பது ஆவணங்களில் மட்டுமே இன்று இருந்துவருகிறது; நடை முறையில் இல்லை. ஒரு பணிப்பிரிவில் ஒரு திருவாகத்தார் பணி வாரிசில்லாமல் நின்றுபோக நேரிடும்போது, அதே பணிப்பிரிவிலுள்ள மற்றொரு நிருவாகச்காரர் அதைத் தன்னோடு இணைத்துக்கொள்ளும் வழக்கமும் முன்னர் இருந்திருக்கிறது. அதன் விளைவாக, இன்று அர்ச்சகப் பணியில் ஸ்ரீரெங்கராஜபட்டர், அலங்காரபட்டர் என்ற இரண்டு நிருவாகத்தாரே இப்பாணிக்குரிய நான்கு திருவாகத்நார் பணியி வையும் செய்து வருகின்றனர். சன்னிதி பரிசாரகப் பணியில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/224&oldid=1468098" இலிருந்து மீள்விக்கப்பட்டது