பக்கம்:அழகர் கோயில்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

218 அழகர்கோயில் பத்து நிருவாகத்தாரில் திருமலை நம்பிகள், தெய்வசிகாமணி நம்பி, அமுதார் ஆகிய மூன்று நிருவாகத்தாரே இன்று எல்லாப் பொறுப் புக்களையும் ஏற்றுச் செய்துவருகின்றனர். கணக்கு என்ற பணிப் பிரிவில் மொத்தம் மூன்று நிருவாகத்தாரில் திருமாலிருஞ்சோலைப் பிரியன் வழியினரே ஏனைய இரண்டு நிருவாகப் பொறுப்புக்க ளையும் செய்துவருகின்றனர். கொத்தன் என்ற பணிப்பிரிவில் அண்ணாவிக்கொத்தன் வழியினரே அலங்காரக்கொத்தன் நிருவாகத் தையும் ஏற்றுள்ளனர். இம்மாற்றங்கள் எவ்வெக்காலங்களில் ஏற் பட்டன என அறியச் சான்றுகளில்லை.11 1977இல் வாரிசற்றுப்போன ஆண்டார் பணிப்பிரிவின் திரு மாலை ஆண்டார் நிருவாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண் டது. கோயிலுக்குள் இந்நிறுவாகத்தாரின் பணி சம்பளம் பெறும் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது. திருவிழாக் காலங்களில் இத்திருவாகத்தாருக்குரிய மாரியாதையினைக் கோயில் அதிகாரிகள் சில நேரங்களில் பெற்றுக்கொள்கிறார்கள்; அல்லது விட்டுவிடுகிறார் கள். இதுபோலவே ஜீயர், ஸ்தானாபதி, திருவிளையாட்டான் ஆகிய பணிப்பிரிவுகளுக்குரிய பொறுப்புக்களை அறநிலையத்துறைப் பணியாளர்கள் செய்கின்றனர். அதற்குரிய பரிவட்ட மரியாதை யினை அதிகாரிகளே பெற்றுக்கொள்கின்றனர். 10.8. பரம்பரைப் பணியாளர் தொழிலும் உரிமையும் : நீதிமன்றத்தில், தொழில், சுதந்திர அட்டவணை செல்லத் தக்கதன்று என முடிவு செய்யப்பட்டபோதும், நடைமுறைக்கும் அட்டவணைக்கும் பெரிய வேறுபாடுகள் காணப்படவில்லை. குறிப் பிடத்தக்க வேறுபாடுகள் சிலவே உண்டு. 1. பட்டர் (பொறுப்பிலுள்ளவர்) ஜீயர், அமுதார், திருமலை நம்பி, பண்டாரி, கணக்கு, திருமாலிருஞ்சோலைப்பிரியன் இவர்கள் ஆறுபேரும் சேர்த்து 'ஸ்தானிகர்' எனப்படுவர். ஆங்கிலேயர் ஆட் சிக்கு முன்வரை இந்தக் குழுவிடமே கோயில் முழுமைக்குமான பொறுப்புகள் இருந்தன. கோயில் கருவூலமும் இவர்கள் பொறுப் பிலேயே இருந்தது. கருவூலக் காப்பிற்கு ஒவ்வொருவரிடமும் முத்திரை அச்சு (முகர்) உண்டு, கருவூலஅறைப் பூட்டின்மீது இவர்கள் மண்முத்திரையிடுவர். முகரும். ஜீயருக்குச் சக்கர முகரும், திருமலை நம்பிக்கும் சிம்ம முகரும், அர்ச்சகப் பணியினர்க்கு சங்கு அமுதாருக்குக் கருட முகரும், திருமாலிருஞ் சோலைப்பிரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/225&oldid=1468099" இலிருந்து மீள்விக்கப்பட்டது