பக்கம்:அழகர் கோயில்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் எ 221 அடியார்' என்பதைக் காட்டும் அடையாளம் இம்முத்திரையே யாகும். பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் இதனைக் குறிப்பதால்' இவர் பாஞ்சராத்திர ஆகமநெறியையே வலியுறுத்துகிறார் அறியலாம். வைகானசர் இம்முத்திரை பெறுவதும் இல்லை; ஒரு குருவினை ஏற்பதும் இல்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்கட்கு இடப்பட்டுவிட்டது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். “வைகானச ஆகமத்தின் கொள்கைகள் வேத நெறியையே அடிப் படையாகக் கொண்டிருப்பதால் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் இதற்குத் தனியான முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. பாஞ்சாராத்திரம் என்ற மற்றவகை நூல் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டு வைணவ ஆசாரி யார்கள் தங்களுடைய அடிப்படையான கொள்கைகளுக்கு இதையே நம்பியிருப்பதாகும் என ராமானுஜ தாத்தாச்சாரியார் விளக்குகிறார்"," வைகானசரைப் பற்றிய செய்திகளிலிருந்து சில முடிவுகளுக்கு வரமுடிகிறது. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் காலத்தில் உருவான கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், ஆழ்வார்கள் காலத் திற்கும் முன்பே வைகானசர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பணியா ளராக நிலைபெற்றிருக்க வேண்டும். எனவே தமிழ்நிலத்து நெறி களில் காலூன்றாமல் தங்களது 'தனித்தன்மையினைக் காப்பவர்க ளாக' (puritans) இவர்கள் உள்ளனர். இவர்கள் வடமொழி வேதங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும். 10.11. சோழியரும் சாமானியரும்: இக்கோயிலில் பரம்பரையாகப் பணிசெய்யும் பிராமணப் பணி யாளரில் •அமுதார்' என்ற பிரிவினர், பிராமணர்களில் 'சாமானியர்' எனப்படும் பிரிவினைச் சேர்த்தவர்கள். ஏனைய பிராமணப் பிரிவினர் சாமானியரை இழித்த பிராமணராகக் கருதுவர். தமிழ்நாட்டில் வேறெத்த வைணவக் கோயிலிலும் சாமானியர் பணியாளராக அனுமதிக்கப்படுவதில்லை. பஞ்சாங்கம் கணித்துச் சோதிடம் கூறு வதும், பிராமணரல்லாத சாதியாருக்குப் 'புரோகிதம்' செய்வதும் சாமானியப் பிராமணரின் குலத்தொழிலாகும். இக்கோயிலில் உயர்பிரிவினைச் சேர்ந்த சோழியப் பிராமணப் பணியாளர்கள், சாமானியர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக் கின்றனர். 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' உரையில் இது பற்றிய ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/228&oldid=1468102" இலிருந்து மீள்விக்கப்பட்டது