பக்கம்:அழகர் கோயில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. அழகர்கோயிலின் தோற்றம் 20. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை சான்ற ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பர் பாடலில் பெயர் சுட்டிச் சொல்லப்பெறும் திருமால் திருப்பதி இது வாகும்.1 முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப் பாடியுள்ளார்.: இக்கோயிலின் தோற்றம் இங்கு ஆராயப்படுகின்றது. 2.1. தோற்றம் குறித்த சான்றுகள் : இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்று (கள்) ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார். இம்மலையில் திருமாலும் பலராமனும் இணைந்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார். ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ, குறிப்புக்களோ காணப்பட வில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்குப் பலராம் மறைந்துவிட்டது போலும். எனவே இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்தி ஏதும் காணப்படவில்லை. 2.2. சீனி. வே. கருத்து : ஒரு வழிபாடு வேறு இக்கோயிலின் தோற்றம் குறித்து மமிலை. சீனி. வேங்கடசாமி கருத்தினைக் கூறுகின்றார். "அழகர்மலை என்று பெயருள்ள இந்த இடம் (திருமாலிருஞ்சோலை ) இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகையில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரியாழ் வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காராமம். அஃதாவது பௌத்த பிட்சுக்கள் வசிக்கும் இடம். அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி(அரச)மரம் என்று கூறப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/23&oldid=1467878" இலிருந்து மீள்விக்கப்பட்டது